செந்தில் பாலாஜி தம்பி வீட்டில் அமலாக்கத்துறை மீண்டும் சோதனை!
Jul 4, 2025, 06:39 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

செந்தில் பாலாஜி தம்பி வீட்டில் அமலாக்கத்துறை மீண்டும் சோதனை!

அசோக் குமார் மனைவிக்கும் அமலாக்கத்துறை சம்மன்.

Web Desk by Web Desk
Aug 9, 2023, 05:53 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமார் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று மீண்டும் சோதனையில் ஈடுபட்டனர். மேலும், அவரது மனைவிக்கும் அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது.

சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில், அமைச்சர் செந்தில் பாலாஜிக்கும், அவரது தம்பி அசோக்குமாருக்கும் அமலாக்கத்துறை சார்பில் சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால், இருவருமே விசாரணைக்கு ஆஜராகவில்லை. இதையடுத்து, கடந்த மாதம் 13-ம் தேதி செந்தில் பாலாஜி, அவரது தம்பி அசோக் குமார் மற்றும் உறவினர்கள், நண்பர்கள் வீடு மற்றும் அலுவலகங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.

இதைத் தொடர்ந்து, மறுநாள் (14-ம் தேதி) அதிகாலை அமலாக்கத்துறையினரால் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். பின்னர், நெஞ்சுவலி, அறுவைச் சிகிச்சை என சம்பவங்கள் அரங்கேறி முடிந்து, சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டார். தற்போது, நீண்ட சட்டப் போராட்டத்துக்குப் பிறகு செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை 5 நாட்கள் காவலில் எடுத்து சென்னை நுங்கம்பாக்கம் சாஸ்திரிபவனில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இது ஒருபுறம் இருக்க, செந்தில் பாலாஜியின் தம்பி அசோக் குமாருக்கும் அமலாக்கத்துறை அதிகாரிகள் 5-க்கும் மேற்பட்ட முறை சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால், உடல் நிலையை காரணம் காட்டி இதுவரை அசோக் குமார் ஆஜராகாமல் இருந்தார். இந்தச் சூழலில், கரூர் – சேலம் தேசிய நெடுஞ்சாலையில் ராம்நகர் பகுதியில் அசோக் குமார் புதிதாக பிரம்மாண்ட வீடு ஒன்றைக் கட்டி வருகிறார். இந்த வீட்டிற்குத் தேவையான கிரானைட்  கற்கள் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டன எனவும், இவை மிகவும் விலை உயர்ந்தது எனவும் தகவல்கள் பரவின.

மேற்கண்ட வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் ஏற்கெனவே சோதனை நடத்திய நிலையில், அதே வீட்டில் இன்று மீண்டும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டிருக்கின்றனர்.

கரூர் செங்குந்தபுரத்திலுள்ள செந்தில் பாலாஜியின் நண்பரும் ஆடிட்டருமான சதீஷ்குமார் அலுவலகத்திலும் சோதனை நடந்து வருகிறது . இது தவிர, புதிய வீட்டில் சோதனை நடத்திய அமலாக்கத்துறை அதிகாரிகள், அசோக் குமார் மனைவி நிர்மலாவின் பெயரைக் குறிப்பிட்டு, நேரில் ஆஜராக , புதிய வீட்டில் சம்மனை ஒட்டியிருக்கிறார்கள்.அசோக் குமார் புதிதாக வீடு கட்டி வரும் மேற்கண்ட இடம், அவரது மனைவி நிர்மலா பெயரில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், அந்த இடம் 25 கோடி ரூபாய் மதிப்புடையது என்றும் , அதை 10.85 லட்சம் ரூபாய்க்கு நிர்மலா பெயரில் பத்திரம் பதிவு செய்திருப்பதாகவும் குற்றச்சாட்டுக்கள் எழுந்த நிலையில் . இதுகுறித்தும் செந்தில் பாலாஜியிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி இருக்கிறார்கள்.

அடுத்து,அவரது தம்பி அசோக் குமார் கட்டி வரும் புதிய வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் மீண்டும் சோதனை நடத்தி இருப்பதும், அவரது மனைவிக்கு சம்மன் அனுப்பி இருப்பதும் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Tags: senthil balaji new houseSenthil balaji BrotherSenthil balaji brother AshokkumarSenthil Balajikarur
ShareTweetSendShare
Previous Post

இந்தியாவின் 76-வது சுதந்திர தின விழாவில் பங்கேற்கும் அமெரிக்க எம்.பி.க்கள்…

Next Post

இந்தியாவை வழிநடத்தும் தகுதி ராகுலுக்கு இருக்கிறதா? ரவிசங்கர் பிரசாத் எம்.பி. அதிரடி கேள்வி!

Related News

சீனாவை மிரட்டும் இந்தியா : கடலுக்கடியில் கண்காணிப்பு – ஆஸி.,யுடன் கைகோர்ப்பு!

கனமழையால் பாதித்த மாநில முதல்வர்களுடன் பேசிய அமித்ஷா!

மேற்கு தொடர்ச்சி மலையில் அதிசயம் : வன விலங்குகள் மத்தியில் வாழும் “தனி ஒரு மூதாட்டி”!

விழுப்புரத்தில் பட்டியல் சமூகத்தை சேர்ந்த பெண் நூலகரை தரையில் அமர்த்தியதாக புகார்!

மக்கள் பிரச்னைகளில் தீவிர கவனம் செலுத்துகிறார் டெல்லி முதல்வர் – சக்சேனா

கிருஷ்ணகிரி : 13 வயது சிறுவனை கொடூரமாக கொலை செய்த இளைஞர்கள் : 3 பேர் கைது!

Load More

அண்மைச் செய்திகள்

மகாராஷ்டிரா : மராத்தி பேசாததற்காக தாக்குதல் – அமைச்சர் கண்டனம்!

மாற்றுத்திறனாளிகளுக்கான நடைபாதையை பொதுமக்கள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் : துணை மேயர் மகேஷ் குமார்

ஆசிரியர் தற்கொலை முயற்சி – பள்ளி வளாகத்தில் பரபரப்பு!

ஆப்ரேஷன் சிந்தூரின்போது பாகிஸ்தான் அணு ஆயுதப் போரின் விளிம்பிற்கு சென்றது – சனாவுல்லா

பாமக சட்டமன்ற குழு கொறடாவாக மயிலம் சிவக்குமார் தேர்வு!

2 வாரங்களில் 1000 முறை நிலநடுக்கம் : அச்சத்தில் ஜப்பான் மக்கள்!

நாகை : ஆக்கிரமிப்புகளை அகற்றிய ஊழியர்களிடம் வாக்குவாதம்!

பொன்முடிக்கு எதிரான புகார்கள் மீது காவல்துறையினர் புலன் விசாரணை செய்ய தயங்கினால், வழக்கு சிபிஐ-க்கு மாற்றப்படும் – நீதிபதி

ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்!

நீலகிரி குடியிருப்பு பகுதிகளில் சுற்றித்திரிந்த காட்டு யானைகள் விரட்டியடிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies