முக்கிய அமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை!
Aug 20, 2025, 07:38 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

முக்கிய அமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை!

Web Desk by Web Desk
Aug 10, 2023, 02:02 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நாடாளுமன்றத்தில் அரசின் நிலைப்பாடு என்ன? என்பது குறித்து தெளிவுபடுத்துவது தொடர்பாக, முக்கிய அமைச்சர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை அவசர ஆலோசனையில் ஈடுபட்டார்.

மணிப்பூர் விவகாரம் தொடர்பாக, பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசு மீது, எதிர்க்கட்சிகள் கடந்த மாதம் 26-ம் தேதி நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டு வந்தன. இதை ஏற்றுக் கொண்ட மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா, ஆகஸ்ட் 8 மற்றும் 9-ம் தேதி இத்தீர்மானத்தின் மீதான விவாதம் நடைபெறும் என்றும், இதற்குப் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி 10-ம் தேதி விளக்கம் அளித்து பேசுவார் என்றும் தெரிவித்திருந்தார்.

அதன்படி, நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் காங்கிரஸ், தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேற்றும், நேற்று முன்தினமும் பேசினார்கள். ராகுல் காந்தி பேசியது கடும் சர்ச்சையைக் கிளப்பி நிலையில், மத்திய அமைச்சர்கள் கிரண் ரிஜ்ஜூ, ஸ்மிருதி இரானி உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்து பேசினார்கள். தொடர்ந்து, நேற்று மாலை நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் பங்கேற்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உரையாற்றினார்.

இதையடுத்து, நம்பிக்கை இல்லாத் தீர்மானத்திற்கு விளக்கம் அளித்து இன்று மாலை 4 மணிக்கு பாரத பிரதமர் மோடி பதிலளிக்க இருக்கிறார். இந்த சூழலில் தான், நாடாளுமன்றத்தில் அரசின் நிலைப்பாடு என்ன என்பதை தெளிவுபடுத்துவது தொடர்பாக, இன்று காலை முக்கிய அமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தி இருக்கிறார். இந்த ஆலோசனையில் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி, பியூஸ் கோயல், அர்ஜூன் ராம் மேக்வால் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில், மத்திய அரசின் நிலைப்பாடு என்ன என்பது குறித்து மத்திய அமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Tags: Modi MeetingIndia ParliamentModiParliamentmodi speechamit shah parliament
ShareTweetSendShare
Previous Post

இன்று உலக சிங்கங்கள் தினம் 2023

Next Post

பொறியியல் படிப்புக்கான முதல் சுற்று கலந்தாய்வு: 193 கல்லூரியில் ஒரு இடங்கள் கூட நிரம்ப வில்லை

Related News

பைக் பரிசளித்த ரஷ்ய அதிபர் – வாயடைத்துப்போன அமெரிக்கர்!

யானையுடன் கைகோர்க்கும் டிராகன் : இந்தியாவிற்கான ஏற்றுமதி தடையை நீக்கிய சீனா!

தூய்மைப் பணியாளர்களின் தொடர் போராட்டங்களால் தமிழகம் பற்றி எரிகிறது : நயினார் நாகேந்திரன்

நேரலையில் பகிரங்க மன்னிப்பு கோரிய தேர்தல் ஆய்வாளர் சஞ்சய் குமார்!

என்டிஏ கூட்டணி வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் வேட்பு மனு தாக்கல்!

AI மூலம் மக்களை ஏமாற்றும் திமுக அரசு ஏமாறும் நாள் வெகு தூரமில்லை : நயினார் நாகேந்திரன்

Load More

அண்மைச் செய்திகள்

காவலாளி அஜித் குமார் லாக்கப் கொலை வழக்கு : முதற்கட்ட குற்றப்பத்திரிகை மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் சிபிஐ தாக்கல்!

சீமான் மீது வழக்குப் பதிவு செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு!

மதுரை : 100 அடி தவெக கொடி கம்பம் சரிந்து விழுந்து விபத்து!

ஆன்லைன் சூதாட்ட ஒழுங்குபடுத்தும் மசோதா மக்களவையில் கடும் அமளிக்கிடையே தாக்கல்!

முதல்வர், அமைச்சர்கள் பதவி பறிப்பு மசோதா மக்களவையில் தாக்கல்!

அகமதாபாத் : பள்ளியில் கத்திக்குத்து – 10-ம் வகுப்பு மாணவன் படுகொலை!

சென்னை : திட்ட அனுமதி பெறாமல் கட்டப்பட்ட தனியார் மருத்துவமனைக்கு சீல்!

ஏழுமலையானுக்கு 121 கிலோ தங்கத்தை காணிக்கையாக வழங்கும் பக்தர்!

மதுரையில் தவெக மாநாடு – டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என்ற மாவட்ட ஆட்சியரின் அறிவிப்பு வாபஸ்!

உக்ரைனின் புதிய Flamingo ஏவுகணை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies