முக்கிய அமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை!
Nov 27, 2026, 02:36 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

முக்கிய அமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை!

Sivasubramanian P by Sivasubramanian P
Aug 10, 2023, 02:02 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

நாடாளுமன்றத்தில் அரசின் நிலைப்பாடு என்ன? என்பது குறித்து தெளிவுபடுத்துவது தொடர்பாக, முக்கிய அமைச்சர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை அவசர ஆலோசனையில் ஈடுபட்டார்.

மணிப்பூர் விவகாரம் தொடர்பாக, பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசு மீது, எதிர்க்கட்சிகள் கடந்த மாதம் 26-ம் தேதி நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டு வந்தன. இதை ஏற்றுக் கொண்ட மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா, ஆகஸ்ட் 8 மற்றும் 9-ம் தேதி இத்தீர்மானத்தின் மீதான விவாதம் நடைபெறும் என்றும், இதற்குப் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி 10-ம் தேதி விளக்கம் அளித்து பேசுவார் என்றும் தெரிவித்திருந்தார்.

அதன்படி, நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் காங்கிரஸ், தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேற்றும், நேற்று முன்தினமும் பேசினார்கள். ராகுல் காந்தி பேசியது கடும் சர்ச்சையைக் கிளப்பி நிலையில், மத்திய அமைச்சர்கள் கிரண் ரிஜ்ஜூ, ஸ்மிருதி இரானி உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்து பேசினார்கள். தொடர்ந்து, நேற்று மாலை நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் பங்கேற்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உரையாற்றினார்.

இதையடுத்து, நம்பிக்கை இல்லாத் தீர்மானத்திற்கு விளக்கம் அளித்து இன்று மாலை 4 மணிக்கு பாரத பிரதமர் மோடி பதிலளிக்க இருக்கிறார். இந்த சூழலில் தான், நாடாளுமன்றத்தில் அரசின் நிலைப்பாடு என்ன என்பதை தெளிவுபடுத்துவது தொடர்பாக, இன்று காலை முக்கிய அமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தி இருக்கிறார். இந்த ஆலோசனையில் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி, பியூஸ் கோயல், அர்ஜூன் ராம் மேக்வால் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில், மத்திய அரசின் நிலைப்பாடு என்ன என்பது குறித்து மத்திய அமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Tags: ModiParliamentmodi speechamit shah parliamentModi MeetingIndia Parliament
Share
Tweet
SendShare
Previous Post

இன்று உலக சிங்கங்கள் தினம் 2023

Next Post

பொறியியல் படிப்புக்கான முதல் சுற்று கலந்தாய்வு: 193 கல்லூரியில் ஒரு இடங்கள் கூட நிரம்ப வில்லை

Related News

அம்பாசமுத்திரம், பெருந்துறை தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்தலாம் – உயர் நீதிமன்றம் தீர்ப்பு!

இன்றைய தங்கம் விலை!

திருப்பதி கோயிலுக்கு 121 கிலோ தங்க வைர நகைகள் – சென்னை ஜெயின் தம்பதி காணிக்கை!

புனரமைக்கப்பட்டு வரும் மதுரை ரயில் நிலையத்தில் தீபம் இடம்பெறும் – அஸ்வினி வைஷ்ணவ் தகவல்!

கள்ளக்குறிச்சி எம்எல்ஏ வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் – உயர் நீதிமன்றத்தில் திமுக வழக்கு!

மயக்க ஊசி செலுத்தியும் மயங்காத யானை – சக்கக்கொம்பனை பிடிக்கும் பணி தீவிரம்!

Load More

அண்மைச் செய்திகள்

கள்ளக்குறிச்சி எம்எல்ஏ தொடர்பான வழக்கு – மாவட்ட ஆட்சியர் நீதிமன்றத்தில் ரகசிய வாக்குமூலம்!

திருச்சி கிழக்கு உள்ளிட்ட 5 தொகுதி இடைத்தேர்தல் தொடர்பான வழக்கு – சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு!

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபமேற்றாத தமிழக அரசுக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு; நாளை விசாரணை

தமிழர்களின் மனதை மாநில அரசு புண்படுத்தியுள்ளது; அமைச்சர் அஷ்விணி வைஷ்ணவ்

துணைவேந்தர்களை விரைந்து நியமிக்க வலியுறுத்தல்; முதலமைச்சருக்கு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் கடிதம்

மீண்டும் பாஜக கூட்டணிக்கு வந்த சிரோமணி அகாலி தளம் : போதை இல்லாத மாநிலமாக பஞ்சாப் மாற்றப்படும் என அமித் ஷா உறுதி – சிறப்பு தொகுப்பு!

நகராட்சி நிர்வாக துறை டெண்டர் முறைகேடு – நேருவின் சகோதரர் உதவியாளர் கைது!

கள்ளக்குறிச்சி எம்எல்ஏ வழக்கு தொடர்பான விசாரணையை சிபிஐக்கு மாற்ற வேண்டும் – ஆளுநரை சந்தித்த பின்னர் உதயநிதி பேட்டி!

காசி தமிழ் சங்கமம் 5.0 – சென்னையில் இருந்து செல்லும் மாணவர்களை வழி அனுப்பி வைத்த ஆளுநர்!

திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு 121 கிலோ தங்க ஆபரணம் காணிக்கையாக வழங்கும் தமிழர்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies