உலகம் முழுவதும் “காடுகளின் ராஜா” என்று அழைக்கப்படும் சிங்கங்களின் எண்ணிக்கை, வேட்டையாடுதல் அச்சுறுத்துதல்கள், காலநிலை மாற்றம் மற்றும் இனபெருக்கக் குறைவு ஆகியவற்றால் உலகளவில் குறைந்து வருகிறது.
இந்நிலையில், உலக அளவில் உள்ள சிங்கங்களை பாதுகாக்க ஆண்டு தோறும் ஆகஸ்ட் 10-ஆம் தேதி உலக சிங்கம் தினம் அனுசரிக்கப்படுகிறது. இதன் நோக்கம் அழிவின் விளிம்பில் இருக்கும் சிங்கங்களை பாதுகாப்பதாகும். அதன் எண்ணிக்கையை அதிகரிக்கும் வகையில் 2013ம் ஆண்டு முதல் கொண்டாடப்பட்டு வரும் உலக சிங்கங்கள் தினம் முதன்முதலில் சிங்கங்களை பாதுகாப்பதற்காகவே செயல்பட்டு வரும் Big Cat Rescue என்ற சரணாலயத்தால் உருவாக்கப்பட்டது. மேலும், டெரெக் மற்றும் பெவர்லி ஜோபர்ட் என்ற இரு விலங்குகள் ஆர்வலர் தம்பதியினராலும் இந்த தினம் உருவாக்கப்பட்டது.
இதுக் குறித்து பாரத பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் ” உலக சிங்கங்கள் தினம் என்பது உலக அளவில் உள்ள கம்பீரமான விலங்கான சிங்கங்களை கொண்டாடும் நாள் ஆகும். உலக அளவில் புகழ்பெற்ற ஆசிய சிங்கங்கள் உள்ள நாடாக இந்தியா இருப்பதில் பெருமை அளிக்கிறது. கடந்த சில ஆண்டுகளாக அதன் எண்ணிக்கைகள் இந்தியாவில் அதிகரித்துள்ளது. தொடர்ந்து நாம் சிங்கங்களை போற்றி பாதுகாப்போம். அவை இனி வரும் தலைமுறைகளுக்கு வளம் தர உறுதி செய்வோம்” என அவர் தெரிவித்தார் .
World Lion Day is an occasion to celebrate the majestic lions that captivate our hearts with their strength and magnificence. India is proud to be home to the Asiatic Lions and over the last few years there has been a steady rise in the lion population in India. I laud all those… pic.twitter.com/ohWcPP2Ofe
— Narendra Modi (@narendramodi) August 10, 2023
இந்தியாவில் தற்போதைய கணக்கெடுப்பின் படி 600 முதல் 700 வரையிலான சிங்கங்கள் இருப்பதாக கூறப்படுகிறது. இந்தியாவில் ஆசிய சிங்கங்களின் வகை காணப்படுகின்றன. குஜராத்தில் உள்ள கிர் தேசிய சரணாலயத்தில் மட்டுமே இவை காணப்படும். ஆசிய சிங்க இனத்தின் கடைசி சிங்கங்கள் இங்குதான் வாழ்கின்றது. இந்தியாவில் வாழும் சிங்கங்களை பாதுகாக்க மத்திய அரசு பல்வேறு திட்டங்களை வகுத்து செயல்படுத்தி வருகிறது. 1972 முதலே சிங்கங்களை பாதுகாப்பதற்கான திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.