கடலை மிட்டாய்க்கும், ஹாக்கி விளையாட்டுக்கும், தீப்பெட்டித் தொழிற்சாலைக்கும் பெயர் பெற்ற நகரமான கோவில்பட்டி, இன்று பிரதமர் நரேந்திர மோடியின் நலத்திட்டங்களால் பெரிதும் பலனடைந்து வருகிறது என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில்,
இன்றைய என் மண் என் மக்கள் பயணம், பல இலக்கியவாதிகளையும் தேசப் பற்றாளர்களையும் நம் நாட்டுக்கு வழங்கிய கோவில்பட்டி நகரில், மாண்புமிகு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி மீது கொண்ட அளப்பரிய அன்பினால் பெரும் திரளெனக் கூடியிருந்த மக்கள் நடுவே சிறப்பாக அமைந்தது.
அருகே உள்ள எட்டயபுரத்தில் பிறந்த மகாகவி பாரதியின் கனவுகள், மாண்புமிகு பாரதப் பிரதமரின் Make in India திட்டத்தின் மூலமாக இன்று நனவாகிக் கொண்டிருக்கின்றன. காசி தமிழ்ச் சங்கமம் பாரதியின் புகழை உலகறியச் செய்துள்ளது.
சாகித்திய அகாடமி விருது வென்ற, நவீன இலக்கியத்தின் முன்னோடி படைப்பாளிகளில் ஒருவர் எழுத்தாளர் கி.ரா. பெருந்தலைவர் காமராஜரின் நெருங்கிய நண்பரும் சுதந்திரப் போராட்ட தியாகியுமான ஐயா கோபாலகிருஷ்ண யாதவ், இந்த மண்ணில் பிறந்தவர்கள் என்பதில் நம் அனைவருக்குமே பெருமை.
இன்றைய #EnMannEnMakkal பயணம், பல இலக்கியவாதிகளையும் தேசப் பற்றாளர்களையும் நம் நாட்டுக்கு வழங்கிய கோவில்பட்டி நகரில், மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு @narendramodi அவர்கள் மீது கொண்ட அளப்பரிய அன்பினால் பெரும் திரளெனக் கூடியிருந்த மக்கள் நடுவே சிறப்பாக அமைந்தது.
அருகே உள்ள… pic.twitter.com/nBgCsyzOJL
— K.Annamalai (@annamalai_k) August 11, 2023
கடலை மிட்டாய்க்கும், ஹாக்கி விளையாட்டுக்கும், தீப்பெட்டித் தொழிற்சாலைக்கும் பெயர் பெற்ற நகரமான கோவில்பட்டி, இன்று பிரதமர் நரேந்திர மோடியின் நலத்திட்டங்களால் பெரிதும் பலனடைந்து வருகிறது.
மோடியின் முகவரி: கோவில்பட்டி
முத்ரா கடனுதவியின் மூலம் தொழில் முனைவராகியிருக்கும் திருமதி கண்ணாயிரம், விவசாயிகளுக்கு வருடம் ₹6000 மூலம் பலனடையும் திரு தர்மராஜ், பிரதமரின் அனைவருக்கும் வீடு திட்டத்தின் மூலம் பயனடைந்த திருமதி காமாட்சி, செல்வமகள் திட்டத்தின் மூலம் பயனடையும் செல்வி கார்த்திகா. இவர்கள் கோவில்பட்டியில் மாண்புமிகு பிரதமரின் முகவரியாக விளங்குகின்றனர்.
கோவில்பட்டியின் குடி நீர் பிரச்சினையைத் தீர்க்காமல், பாராளுமன்றத்தில் போய் சிலப்பதிகாரம் படியுங்கள் என்கிறார் திமுக எம்பி திருமதி கனிமொழி. இவர்கள் முதலில் தமிழை வளர்க்க என்ன செய்தார்கள்? தேர்தல் வாக்குறுதிகளான கோவில்பட்டியில் தொழிற்பேட்டை, தூத்துக்குடி மதுரை இணைப்புச் சாலை, குளிர்பதனக் கிடங்குகள் அமைத்தல் என தேர்தல் வாக்குறுதிகள் ஒன்றையும் நிறைவேற்றாமல், கோவில்பட்டி மக்களை அவதிக்குள்ளாக்குகிறார்கள்.
வரும் பாராளுமன்றத் தேர்தலில், திமுக காங்கிரஸ் ஊழல் சந்தர்ப்பவாதக் கூட்டணியை முற்றிலுமாகப் புறக்கணித்து, பாரதப் பிரதமர் நரேந்திர மோடி மூன்றாவது முறையாக மீண்டும் பிரதமராகப் பொறுப்பேற்பார் என்பதற்கு, கோவில்பட்டியில் கூடிய பொதுமக்களின் அன்பே சாட்சி என தெரிவிக்கப்பட்டுள்ளது.