இந்திய தலைமை நீதிபதி பெயரில் போலிச் செய்தி: சமூக வலைத்தளங்களில் வைரலாவதால் பரபரப்பு!
Jan 14, 2026, 03:37 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இந்திய தலைமை நீதிபதி பெயரில் போலிச் செய்தி: சமூக வலைத்தளங்களில் வைரலாவதால் பரபரப்பு!

Sivasubramanian P by Sivasubramanian P
Aug 14, 2023, 08:17 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மத்திய அரசுக்கு எதிராக போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கும் வகையில், இந்தியத்  தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் பெயரில், ஒரு அசாதாரண அறிக்கை சமூக வலைத்தளங்களில் வைரலாகி, பெரும்பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்தியத் தலைமை நீதிபதியாக இருப்பவர் டி.ஒய்.சந்திரசூட். இவரது பெயரில் சமூக வலைத்தளங்களில் இன்று ஒரு பதிவு வைரலாகி வருகிறது. இந்திய ஜனநாயகம், உச்ச நீதிமன்றம் ஜிந்தாபாத் என்று தொடங்கும் அப்பதிவில், “இந்திய அரசியல் அமைப்பையும், ஜனநாயகத்தையும் காப்பாற்ற நாங்கள் எங்களால் முடிந்த அனைத்து முயற்சிகளையும் செய்து வருகிறோம். ஆனால், இதற்கு மக்களாகிய உங்களது ஒத்துழைப்பு மிகவும் முக்கியம்.

ஆகவே, மக்கள் அனைவரும் ஒன்றுபட வேண்டும். அரசிடம் உரிமைகளைக் கேட்டு வீதியில் இறங்கிப் போராடுங்கள். இந்தச் சர்வாதிகார அரசு, மக்களைப் பயமுறுத்தும், அச்சுறுத்தும். ஆனால், நீங்கள் எதற்கும் பயப்பட வேண்டாம். தைரியமாக அரசிடம் கணக்குக் கேளுங்கள். தவறைத் தட்டிக் கேளுங்கள். உங்களுடன் நான் இருக்கிறேன்” என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.

அந்தப் பதிவில், தலைமை நீதிபதி சந்திரசூட்டின் புகைப்படமும் இடம்பெற்றிருக்கிறது. இப்பதிவு ஹிந்தி மற்றும் ஆங்கிலத்தில் வாட்ஸ் ஆப்பில் பகிரப்பட்டு வருகிறது. எனினும், இது போலியான பதிவு என்றும், இப்படியொரு பதிவை தலைமை நீதிபதி வெளியிடவில்லை என்றும், உச்ச நீதிமன்றத்தின் பொதுச்செயலாளர் அதுல் குர்ஹேகர் மற்றும் இந்திய சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆகியோர் மறுப்புத் தெரிவித்திருக்கின்றனர்.

இதுகுறித்து பேசிய துஷார் மேத்தா, “இது ஒரு போலியான பதிவு. எந்த தலைமை நீதிபதியும், மத்திய அரசுக்கு எதிராக இதுபோன்றதொரு செயலை செய்ய மாட்டார்கள். அதிலும், தலைமை நீதிபதி சந்திரசூட் மிகவும் புத்திசாலி. ஆகவே, இப்படியொரு செயலை அவர் செய்திருக்க மாட்டார். தவிர, நீதியரசரின் பெயரால் இப்படியொரு பதிவை வெளியிட்டிருக்கும் நபர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

Tags: supreme court chief justice chandrachudsupreme court
ShareTweetSendShare
Previous Post

சுதந்திர தினத்தையொட்டி 954 காவல்துறை அதிகாரிகளுக்குப் பதக்கங்கள்- மத்திய அரசு அறிவிப்பு

Next Post

வருமான வரித்துறை அதிகாரிகள் தாக்கப்பட்ட வழக்கு: விசாரிக்க மறுத்து உயர் நீதிமன்ற நீதிபதி விலகல்!

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies