சுயநல சந்தர்ப்பவாத திமுக, காங்கிரஸ் கூட்டணியைப் புறக்கணிப்போம் - அண்ணாமலை.
Aug 15, 2025, 11:03 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

சுயநல சந்தர்ப்பவாத திமுக, காங்கிரஸ் கூட்டணியைப் புறக்கணிப்போம் – அண்ணாமலை.

Web Desk by Web Desk
Aug 15, 2023, 04:05 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கடந்த 9 ஆண்டுகளில் இந்தியாவிலிருந்து திருடப்பட்ட 350க்கும் மேற்பட்ட சாமி  சிலைகளை பாரத பிரதமர் நரேந்திர மோடி மீட்டுக் கொண்டுவந்துள்ளார் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இது குறித்து தனது எக்ஸ் (ட்விட்டர்) பதிவில்

இன்றைய என் மண் என் மக்கள் பயணம், சங்க கால இலக்கியங்களிலும் புராணங்களிலும் இடம்பெற்ற, அசுரர் குடி கெடுத்த ஐயன் முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் நகரத்தில் பெரும் மக்கள் திரள் நடுவே இனிதே நடந்தேறியது. “நெடுவேல் திகழ்பூண் முருகன் தீம்புனல் அலைவாய்” என்று தொல்காப்பியத்தில் புகழப்பட்ட முருகப்பெருமானின் பராக்கிரமம் நிறைந்த ஊர். ஆதிசங்கரருக்கு அருளிய புண்ணிய பூமி.

1646ஆம் ஆண்டு காலகட்டத்தில், திருச்செந்தூர் முருகன் கோவிலை டச்சு படைகளிடம் இருந்து காப்பாற்ற திருச்செந்தூர் மக்கள் ஒன்றுகூடி டச்சு படையை எதிர்கொண்ட வீரவரலாறு கொண்ட ஊர் இந்த திருச்செந்தூர். அன்று டச்சுக்காரன் முருகனை திருடினான் இன்று இந்து சமய அறநிலையத் துறை, முருகரை தவிர மற்ற அனைத்தையும் திருடுகிறது. நம் கோவிலில் நடக்கும் அத்துமீறல்களை நாம் தட்டி கேட்கவேண்டாமா? நம்மை காக்கும் முருகனின் சொத்தை காப்பது நமது கடமை இல்லையா?

புராதன கோவில்களின் நகைகள் உருக்கப்படுகின்றன. பூஜை புனஸ்காரங்கள் நிறுத்தப்படுகின்றன. திருச்செந்தூர் முருகன் கோவிலில் கடவுளுக்கு வேண்டி, பசுமாட்டை தானம் கொடுப்பார்கள். திருச்செந்தூர் முருகன் கோவிலில் நடந்த தணிக்கை அறிக்கையின்படி, அப்படி தானமாகப் பெற்ற 5,309 பசு மாடுகளை காணவில்லை. மாடுகளைத் திருடி விற்றுவிட்டார்களா? கோவில்களில் இருந்து திருடப்பட்ட சிலைகள், கோவில் சம்மந்தப்பட்ட பொருட்கள் மட்டும் 50,000க்கும் மேல் இருக்கும் என 1989-ல் ‘யுனெஸ்கோ’ கூறியுள்ளது.

கடந்த 9 ஆண்டுகளில் இந்தியாவிலிருந்து திருடப்பட்ட 350க்கும் மேற்பட்ட சாமி சிலைகளை நமது பாரத பிரதமர் மீட்டுக் கொண்டுவந்துள்ளார். திருச்செந்தூர் அருகே உள்ள ஆத்தூர் வெற்றிலைக்கு, இந்த வருடம் ஏப்ரல் மாதம் புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. இது திருச்செந்தூருக்குக் கிடைத்த பெருமை.

 

திமுக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனால் தொகுதிக்கோ மக்களுக்கோ எந்த பலனும் இல்லை அமலி நகர் தூண்டில் வளைவு பாலம் அமைக்க மீனவ சகோதரர்கள் ஒரு வாரத்துக்கும் மேலாகப் போராட்டம் செய்தும், திட்டத்தை நிறைவேற்றாமல் இருக்கிறார். மீனவ சகோதரர்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகள் ஒன்றைக் கூட இந்த ஊழல்…

— K.Annamalai (@annamalai_k) August 14, 2023

 

மோடியின் முகவரி: திருச்செந்தூர்

தமிழகத்தில் ஏழு ஆண்டுகளில் கொடுக்கப்பட்ட மொத்த முத்ரா கடனுதவி 2,02,603.94 கோடி ரூபாய். இதன் மூலம் பலனடைந்தவர்களில் ஒருவரான திருமதி ஆனந்தவள்ளி, வருடம் 6000 ரூபாய் பெறும் விவசாயிகளில் ஒருவரான திரு மந்திரவேல், பிரதமரின் அனைவருக்கும் வீடு திட்டத்தின் மூலம் வீடு பெற்ற திரு பரமசிவம், சுவாநிதி திட்டத்தில் பலனடைந்துள்ள திருமதி தீபா, பிரதம மந்திரியின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தில் பயன்பெற்ற கருப்பட்டி வியாபாரம் செய்யும் திருமதி அற்புதமணி. இவர்கள்தான் பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் முகவரி.

பாரதப் பிரதமர் மோடி, கடலோர மீன் உற்பத்திக்காக ₹26,050 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளார். தமிழகத்தில் இதுவரை மத்சய சம்பதா மற்றும் உட்கட்டமைப்புக்கு ₹3,000 கோடிக்கும் அதிகமான செலவில் திட்டங்கள் நிறைவேற்றியுள்ளார்.

திமுக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனால் தொகுதிக்கோ மக்களுக்கோ எந்த பலனும் இல்லை அமலி நகர் தூண்டில் வளைவு பாலம் அமைக்க மீனவ சகோதரர்கள் ஒரு வாரத்துக்கும் மேலாகப் போராட்டம் செய்தும், திட்டத்தை நிறைவேற்றாமல் இருக்கிறார். மீனவ சகோதரர்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகள் ஒன்றைக் கூட இந்த ஊழல் திமுக அரசு நிறைவேற்றவில்லை. அமைச்சரோ, ஊழல் சொத்துக் குவிப்பு வழக்கில் விசாரணையை எதிர்கொண்டுள்ளார்.

வரும் பாராளுமன்றத் தேர்தலில், கச்சத் தீவைத் தாரை வார்த்த, நம் மீனவ சகோதரர்கள் இலங்கைக் கடற்படையால் கொல்லப்பட்டதை வேடிக்கை பார்த்த, சுயநல சந்தர்ப்பவாத திமுக காங்கிரஸ் கூட்டணியைப் புறக்கணிப்போம். பாரதப் பிரதமர் நரேந்திர மோடி நல்லாட்சி தொடர வாக்களிப்போம் என தெரிவிக்கப்பட்டுள்ளது

Tags: bjpannamalaiannamalai bjpannamalai speech
ShareTweetSendShare
Previous Post

சுதந்திரப் போராட்ட வீரர்கள் கனவை நனவாக்குவோம் – ஆளுநர் ஆர்.என்.ரவி.

Next Post

உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம்: பிரதமர் மோடி உறுதி!

Related News

திமுக-வின் பச்சை பொய்களைத் தோலுரிக்கும் “சொன்னீங்களே, செஞ்சீங்களா?” கேள்வித் தொடர் – சமூக வலைதளப் பக்கத்தில் தொடங்கும் நயினார் நாகேந்திரன்!

சுதந்திரப் போராட்ட வீரர்களின் துணிச்சலை நினைவு கூர்வோம் – அண்ணாமலை

ஒவ்வொருவரும் இல்லங்களில் தேசிய கொடி ஏற்ற வேண்டும் – நயினார் நாகேந்திரன்

சுதந்திர தின விழா கொண்டாட்டம் – தஞ்சை பெரிய கோயிலில் கூடுதல் பாதுகாப்பு!

சுதந்திர தினம் – குமரியில் போலீசார் தீவிர கண்காணிப்பு!

திமுகவிற்கு வாங்கி தான் பழக்கம்; கொடுத்து பழக்கம் இல்லை – இபிஎஸ் விமர்சனம்!

Load More

அண்மைச் செய்திகள்

100வது ஆண்டு விழாவை கொண்டாடும் ஆர்எஸ்எஸ் அமைப்பின் வரலாற்றை எண்ணி பெருமைப்படுகிறேன் – பிரதமர் மோடி

6 மாதங்களில் 6 போர் நிறுத்தம் – அலாஸ்காவில் ட்ரம்ப் பேட்டி!

அணு ஆயுத மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அஞ்சாது – பிரதமர் மோடி

79-வது சுதந்திர தின விழா – செங்கோட்டையில் தேசிய கொடி ஏற்றினார் பிரதமர் மோடி!

79-வது சுதந்திர தின விழா – செங்கோட்டையில் மூவர்ண கொடி ஏற்றுகிறார் பிரதமர் மோடி!

பயங்கரவாதத்துக்கு எதிரான வரலாற்று சான்று ஆப்ரேஷன் சிந்தூர் – குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு

ஜம்மு-காஷ்மீரில் மேகவெடிப்பால் பெரு வெள்ளம் – பலி எண்ணிக்கை 46 ஆக உயர்வு!

இந்தியாவின் அதிக உள்கட்டமைப்பு முதலீடு நீண்ட கால வளர்ச்சி வாய்ப்புகளை ஆதரிக்கும் – S&P குளோபல் மதிப்பீட்டு கணிப்பு!

1090 பேருக்கு வீர தீர சேவைக்கான குடியரசு தலைவர் விருது அறிவிப்பு!

அனைவருக்கும் சுதந்திர தின வாழ்த்துகள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies