உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம்: பிரதமர் மோடி உறுதி!
Aug 20, 2025, 09:24 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம்: பிரதமர் மோடி உறுதி!

Web Desk by Web Desk
Aug 15, 2023, 01:33 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

2014-ல் ஆட்சிக்கு வந்தபோது உலக பொருளாதாரத்தில் இந்தியா 10-வது இடத்திலிருந்தது. தற்போது, 5-வது இடத்திற்கு முன்னேறி இருக்கிறது. எனது அடுத்த 5 ஆண்டுக்கால ஆட்சியில் நாடு உலகின் 3-வது பொருளாதாரங்களில் ஒன்றாக உருவெடுக்கும். இது நரேந்திர மோடியின் வாக்குறுதி என்பது பிரதமர் மோடி கூறியிருக்கிறார்.

நாட்டின் 77-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, டெல்லி செங்கோட்டையில் மூவர்ணக் கொடியை ஏற்றி வைத்து நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பாரத பிரதமர் நரேந்திர மோடி, “கொரோனாவுக்குப் பிறகு, உலகத்தையே வழிநடத்தும் நாடாக இந்தியா இருந்து வருகிறது. மேலும், புதிய உலக வரிசை, புதிய புவிசார் அரசியலை உருவாக்கி வருகிறது. சீர்திருத்தம், செயல்பாடு, மாற்றம் ஆகியவை நாட்டை மாற்றி வருகின்றன.

இந்தியா என்ற பயணத்தில் தொடர்ந்து நீடிக்க நிலையான அரசு தேவை. ஆகவே, நாட்டின் வளர்ச்சிக்கு உறுதியான மற்றும் நிலையான அரசு தேவை என்று மக்கள் நினைக்கிறார்கள். இதன் காரணமாகவே, எங்களை 2-வது முறையாகத் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். மக்கள் எங்கள் மீது வைத்த நம்பிக்கையை வீணாக்கவில்லை. நாங்கள் 2014-ம் ஆண்டு ஆட்சிக்கு வந்தபோது, உலக பொருளாதாரத்தில் நம் நாடு 10-வது இடத்திலிருந்தது. ஆனால், 140 கோடி மக்களின் முயற்சியால் தற்போது 5-வது இடத்திற்கு வந்து விட்டோம்.

இது எளிதாகவும், தானாகவும் நடக்கவில்லை. நாட்டை தனது பிடிக்குள் வைத்திருந்த ஊழல் அரங்கனை விரட்டிவிட்டு, நாட்டின் பொருளாதாரத்தை வலுவான நிலைக்குக் கொண்டு வந்திருக்கிறோம். அதேபோல, எனது அடுத்த 5 ஆண்டுக்கால ஆட்சியில் உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடுகளில் இந்தியா 3-வது இடத்தில் இருக்கும். இது நரேந்திர மோடியின் வாக்குறுதி.

இது ஒருபுறம் இருக்க, கொரோனா தாக்கத்திலிருந்து உலகம் இன்னும் மீளவில்லை. அதோடு, ரஷ்யா-உக்ரைன் போர் மற்றொரு நெருக்கடியை ஏற்படுத்தி வருகிறது. இதனால், தற்போது உலக பணவீக்கம் கடும் நெருக்கடியைச் சந்தித்து வருகிறது. நமது தேவைக்குப் பொருட்களை இறக்குமதி செய்யும்போது, துரதிருஷ்டவசமாகப் பணவீக்கத்தையும் இறக்குமதி செய்ய வேண்டிய நிலை இருக்கிறது. எனினும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த இந்தியா அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது.

உலகின் மற்ற நாடுகளை விட, நமது நிலைமை சிறப்பாக இருக்கிறது என்பதற்காக நாம் திருப்தி அடைய முடியாது. பண வீக்கத்தின் சுமையைக் குறைக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது கட்டாயமாகும். அதேபோல, எல்லை கிராமங்கள் நாட்டின் கடைசி கிராமங்கள் என்று கூறினார்கள். அவை கடைசி கிராமங்கள் அல்ல, நாட்டின் முதல் கிராமங்கள். ஆகவேதான், எல்லை கிராமங்களைச் சேர்ந்த 600 பேரைச் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்கச் செய்திருக்கிறோம்” என்று கூறினார்.

Tags: PM ModiNarendra ModiModimodi speechModi Parliament Speech
ShareTweetSendShare
Previous Post

சதுரங்க உலகக் கோப்பையில் நேரடியாக காலிறுதிக்கு முன்னேறிய விதித் குஜராத்தி !

Next Post

நீட் விவகாரத்தில் எதிர்க்கட்சித் தலைவர் போல முதல்வர் ஸ்டாலின் செயல்படுகிறார் – அண்ணாமலை குற்றச்சாட்டு

Related News

சீனாவுன்னு ஒரு நியாயம் இந்தியாவுக்கு ஒரு நியாயம் : அமெரிக்காவின் இரட்டை நிலைப்பாடு!

40 மாடி உயரத்தில் ராக்கெட் : இனி விண்வெளியில் இந்தியா தான் ராஜா!

இந்திய பொருட்களை வாங்க தயார் : நேசக்கரம் நீட்டிய ரஷ்யா!

என்ன விலை அழகே : இத்தாலி பிரதமரை வர்ணித்து சர்ச்சையில் சிக்கிய ட்ரம்ப்!

மருத்துவத் துறையில் கலக்கும் மகாராஷ்டிரா!

பேரிடர் மேலாண்மை – முன்னேறும் மகாராஷ்டிரா!

Load More

அண்மைச் செய்திகள்

பரிதவிக்கும் பயனாளர்கள் : அடிப்படை வசதி இல்லாத பாஸ்போர்ட் அலுவலகம்!

பைக் பரிசளித்த ரஷ்ய அதிபர் – வாயடைத்துப்போன அமெரிக்கர்!

யானையுடன் கைகோர்க்கும் டிராகன் : இந்தியாவிற்கான ஏற்றுமதி தடையை நீக்கிய சீனா!

தூய்மைப் பணியாளர்களின் தொடர் போராட்டங்களால் தமிழகம் பற்றி எரிகிறது : நயினார் நாகேந்திரன்

நேரலையில் பகிரங்க மன்னிப்பு கோரிய தேர்தல் ஆய்வாளர் சஞ்சய் குமார்!

என்டிஏ கூட்டணி வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் வேட்பு மனு தாக்கல்!

AI மூலம் மக்களை ஏமாற்றும் திமுக அரசு ஏமாறும் நாள் வெகு தூரமில்லை : நயினார் நாகேந்திரன்

காவலாளி அஜித் குமார் லாக்கப் கொலை வழக்கு : முதற்கட்ட குற்றப்பத்திரிகை மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் சிபிஐ தாக்கல்!

சீமான் மீது வழக்குப் பதிவு செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு!

மதுரை : 100 அடி தவெக கொடி கம்பம் சரிந்து விழுந்து விபத்து!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies