சதுரங்க உலகக் கோப்பையில் இரஷ்யச் சதுரங்க மாஸ்டர் இயன் நெபோம்னியாச்சியை 10 நிமிட போட்டியில் 2-0 என்ற கணக்கில் தோற்கடித்து காலிறுதிக்கு முன்னேறினார் விதித் குஜராத்தி.
பன்னாட்டுச் சதுரங்கக் கூட்டமைப்பு (FIDE) நடத்தும் உலகக்கோப்பை சதுரங்கப் போட்டி நடந்து வருகிறது. இதில் முன்னதாக கிராண்ட்மாஸ்டர் ஆர். பிரக்ஞானந்தா, அமெரிக்க கிராண்ட்மாஸ்டர் ஹிகாரு நகமுராவை டைபிரேக்கர்களில் வெளியேற்றியதால், கால் இறுதிக்கு முந்தைய போட்டிக்குத் தேர்வானர். இது உலகக் கோப்பையின் மிகப்பெரிய வெற்றியாகப் பார்க்கப்பட்டது.
Vidit defeats Nepomniachtchi 2-0 in 10-minute games and advances to the quarterfinals!
📷 by Stev Bonhage pic.twitter.com/RiEOOyYP8A
— International Chess Federation (@FIDE_chess) August 14, 2023
இதனைத் தொடர்ந்து, 10 நிமிட போட்டியில் இரஷ்யச் சதுரங்க மாஸ்டர் இயன் நெபோம்னியாச்சியை இந்தியச் சதுரங்க மாஸ்டர் விதித் குஜராத்தி 2-0 என்ற புள்ளி கணக்கில் தோற்கடித்து நேரடியாகக் காலிறுதிக்கு முன்னேறினார்.