திண்டுக்கல் மாவட்டட்ம் கொடைக்கானலில் உள்ள வன சுற்றுலா தலங்களான மோயர்
சதுக்கம், பைன் மரக்காடுகள், தூண்பாறை, குணா குகை உள்ளிட்டவை பராமரிப்பு பணிகள்
காரணமாக கடந்த வாரம் மூடப்பட்டன. இதனால் அந்த இடங்களில் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், இன்று (ஆகஸ்ட்18) முதல் தடை விதிக்கப்பட்டிருந்த சுற்றுலாத் தலங்களுக்கு மீண்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. சுற்றுலா தல வனப்பகுதிக்குள் நுழையும் வாகனங்களில் வருபவர்கள், ஆர்சிபுக், ஓட்டுநர் உரிமம், மாசு சான்றிதழ் ஆகியவற்றை வைத்திருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.