கேரளாவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கத்தின் (RSS) பொதுச் செயலாளர் தத்தாத்ரேயா ஹோசபாலே பேசும் போது, இந்தியா மனித நேயத்திற்காக வாழ்கிறது. அதற்குக் காரணம் “மதிப்புடன் கூடிய கலாச்சாரம், வாழ்க்கையின் தனித்துவமான பார்வை” என்று தெரிவித்தார்.
கேரளாவில் மிகவும் பிரபல வார இதழான கேசரி, நடத்திய “அமிர்தசதம்” என்ற நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக ஆர்எஸ்எஸ் பொதுச் செயலாளர் தத்தாத்ரேயா ஹோசபாலே கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
அவர் பேசும் போது, மனித நேயத்திற்காகவே வாழக்கூடிய நாடு இந்தியா. இந்தியா பல கலாச்சார ஒற்றுமையுடன் தனித்துவமாக வாழும் நாடு. தனித்துவமான வாழ்க்கைக்குக் கலங்கரை விளக்கமாகத் திகழும் நாடு இந்தியா.
இதற்குக் காரணம், நம்மிடம் உள்ள வலுவான தேசிய உணர்வு. அந்த தேசிய உணர்வு வலுப்பெறவே ஆர்எஸ்எஸ் சங்கம் உழைத்து வருகிறது. அதனையே வாழ்க்கை முறையாக மாற்றி, டாக்டர் கேசவ் பலிராம் ஹெட்கேவார் யதார்த்தமாக வாழ கற்றுக் கொடுத்தவர் . “டாக்டர் ஹெட்கேவார் ஒரு பிறவி தேசபக்தர். அவர் சிறுவயது முதலே சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டார். பாலகங்காதர திலகரின் சுதந்திரப் போராட்டத் தொடரால் ஈர்க்கப்பட்டு, பல்வேறு புரட்சிகர நடவடிக்கைகளிலும் பங்கேற்றார். நாட்டின் சுதந்திரப் போராட்டக் காலத்தில் சங்கம் வளர்ந்து வந்தது. சுதந்திரத்திற்குப் பிறகு ஒரு தேசிய அமைப்பாக சங்கம் மாற்றப்பட்டது.
“கலாச்சார அடி நாதத்தை ஒருங்கமைக்காமல் முழுமையான சுதந்திரத்தை அடைவது சாத்தியமில்லை என்றும், நாட்டின் வளர்ச்சிக்காக ஒவ்வொரு தனிநபரும் தேசத்தின் இலட்சியத்தைத் தனது லட்சியமாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்றார்.