மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் இன்று (ஆகஸ்ட் 17,) இந்தியக் கடற்படையின் புராஜெக்ட் 17ஏ திட்டத்தின் ஆறாவது கப்பலான விந்தியகிரியின் தொடக்க விழாவில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு கலந்து கொண்டார். இந்நிகழ்வில் விந்தியகிரி கப்பலை நாட்டிற்கு குடியரசுத் தலைவர் அற்பணித்தார்.
இந்நிகழ்ச்சியில் பேசிய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு,
விந்தியகிரியின் வெள்ளோட்டம் இந்தியாவின் கடல்சார் திறன்களை மேம்படுத்துவதில் முன்னேற்றத்தைக் குறிக்கிறது. இது உள்நாட்டுக் கப்பல் கட்டுமானம் மூலம் தற்சார்பு இந்தியா இலக்கை அடைவதற்கான ஒரு படியாகும். 17 ஏ திட்டத்தின் ஒரு பகுதியாக இருக்கும் விந்தியகிரி, தற்சார்பு மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றத்திற்கான நமது உறுதிப்பாட்டைப் பிரதிபலிக்கிறது. இந்தத் திட்டம் அதிநவீன தொழில்நுட்பத்தை உருவாக்குவதற்கான உள்நாட்டுக் கண்டுபிடிப்புகளை நிரூபிக்கிறது.
President Droupadi Murmu graced the launch ceremony of Vindhyagiri – the sixth ship of project 17A of Indian Navy at Kolkata. The President said that the launch of Vindhyagiri marks a move forward in enhancing India’s maritime capabilities. It is also a step towards achieving the… pic.twitter.com/IsEl76MItu
— President of India (@rashtrapatibhvn) August 17, 2023
இந்தியா இன்று உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதாரமாக உள்ளது என்றும், எதிர்காலத்தில் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாற நாங்கள் முயற்சித்து வருகிறோம். வளர்ந்து வரும் பொருளாதாரம் என்பது அதிக அளவிலான வர்த்தகமாகும். நமது வர்த்தகப் பொருட்களின் பெரும்பகுதி கடல்கள் வழியாக செல்கின்றன. இது நமது வளர்ச்சி மற்றும் நல்வாழ்விற்குப் பெருங்கடல்களின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுகிறது.
இந்தியப் பெருங்கடல் மற்றும் மிகப்பெரிய இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் பாதுகாப்பு பல அம்சங்களைக் கொண்டுள்ளது என்றும், பாதுகாப்பு அச்சுறுத்தல்களைச் சமாளிப்பதில் கடற்படை எப்போதும் சுறுசுறுப்பாக இருக்க வேண்டும் என்று கூறினார்.