20 வயதுக்குள்பட்ட உலக சாம்பியன்ஷிப் 2023 போட்டியில் பட்டம் வென்ற இந்திய மகளிா் மல்யுத்த அணிக்கு பிரதமா் மோடி வாழ்த்துத் தெரிவித்துள்ளாா்.
இது குறித்து தனது எக்ஸ் பதிவில், இந்திய மகளிா் மல்யுத்த வீரா்களுக்கு ஒரு மகத்தான வெற்றி இது எனவும் 2023 யு-20 உலக சாம்பியன்ஷிப்பில் நமது பெண்கள் மல்யுத்த அணி பட்டத்தை வென்றுள்ளது. இதில் 3 தங்கம் உள்ளிட்ட 7 பதக்கங்களுடன் சிறப்பான செயல்திறனை வெளிப்படுத்தியுள்ளது.
A monumental triumph for Indian Women Wrestlers! Our team has won the Women Wrestling team title at the 2023 U-20 World Championships, delivering an unparalleled performance with 7 medals, of which 3 are Golds. Among the memorable performances was by Antim for retaining her title… pic.twitter.com/qs5w7dKzgR
— Narendra Modi (@narendramodi) August 19, 2023
இதில் இரண்டு முறை கோப்பையை வென்ற முதல் வீரா் என்ற பெருமையை “ஆன்டிம்” பெற்றது முக்கிய நிகழ்வுகளில் ஒன்று எனவும் இந்த வெற்றி வளா்ந்து வரும் நமது மல்யுத்த வீரா்களின் அசைக்க முடியாத அா்பணிப்பும், அசாதாரணமான திறமை என்று தெரிவித்தார்.