இமாச்சலுக்கு ரூ.862 கோடி நிதியுதவி: அனுராக் தாக்கூர் தகவல்!
Oct 1, 2026, 02:41 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இமாச்சலுக்கு ரூ.862 கோடி நிதியுதவி: அனுராக் தாக்கூர் தகவல்!

Sivasubramanian P by Sivasubramanian P
Aug 21, 2023, 01:14 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

பேரிடர் பாதித்த இமாச்சலப் பிரதேச மாநிலத்திற்கு மத்திய அரசு ரூ.662 கோடி ரூபாய் நிதியுதவி வழங்கி இருப்பதாகவும், பாரதப் பிரதமர் நரேந்திர மோடி கூடுதலாக 200 கோடி ரூபாய் வழங்குவதாக தெரிவிதிருப்பதாகவும், மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்திருக்கிறார்.

இமாச்சலப் பிரதேசத்தில் கடந்த 3 மாதங்களாகவே பருவமழை பெய்து வருகிறது. இடைவிடாதப் பருவமழையாலும், திடீர் மேக வெடிப்புகளாலும் பேய்மழை கொட்டியதாலும், பெருவெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. மேலும், ஆங்காங்கே பல்வேறு இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டிருக்கின்றன. இதனால், மாநிலம் மிகப்பெரிய பேரழிவைச் சந்தித்திருக்கிறது.

இதையடுத்து, இமாச்சலப் பிரதேச அரசு முழு மாநிலத்தையும் இயற்கை பேரிடர் பாதித்த பகுதியாக அறிவித்திருக்கிறது. மேலும், மாநில அரசின் சமீபத்திய தகவல்களின்படி, ஜூன் 24 முதல் தற்போதுவரை இமாச்சலின் மொத்த பண இழப்பு 8014.61 கோடி ரூபாயை எட்டியுள்ளது. இந்தாண்டுப் பருவமழைக் காலத்தில் 113 நிலச்சரிவுகள் ஏற்பட்டிருக்கிறது. பெருவெள்ளத்தினாலும் , நிலச்சரிவுகளாலும்  மொத்தம் 2,022 வீடுகள் முழுமையாகவும், 9,615 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன.

மேலும், மழை வெள்ளம் காரணமாக மாநிலம் முழுவதும் சாலை விபத்துக்களில் இதுவரை 117 பேரும், பருவமழை சீற்றத்தில் 224 பேர் உயிரிழந்துள்ளதாகவும் அரசு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தவிர, சம்மர் ஹில் நிலச்சரிவு சம்பவத்தில் இதுவரை 17 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதுடன், காணாமல் போனவர்களின் சடலங்களை மீட்பதற்கான மேல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்தச் சூழலில், இமாச்சல் மழை வெள்ளம் தொடர்பாக கடந்த 19-ம் தேதி முக்கிய மத்திய அமைச்சர்கள் மற்றும் பா.ஜ.க. தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா ஆகியோருடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். இதன் தொடர்ச்சியாக, பா.ஜ.க. தலைவர் நட்டா, மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் ஆகியோர் நேற்று இமாச்சலப் பிரதேசத்துக்கு நேரில் சென்று ஆய்வு நடத்தினர். அப்போது, பாதிக்கப்பட்ட மக்களையும் சந்தித்து ஆறுதல் கூறினர்.

இதையடுத்து, மாநில நிர்வாகத்துடன் இருவரும் ஆலோசனை நடத்தினர். அப்போது, இமாச்சலுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்யும் என்று தெரிவித்தனர். இந்த சூழலில், செய்தியாளர்களைச் சந்தித்த அனுராக் தாக்கூர், “இமாச்சலப் பிரதேச அரசுக்கு மொத்தம் ரூ.662 கோடி ரூபாயை மத்திய அரசு வழங்கியுள்ளது. இது தவிர, தேசியப் பேரிடர் நிவாரண நிதியிலிருந்து மாநிலத்திற்குக்  கூடுதலாக ரூ.200 கோடி ரூபாய் வழங்குவதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார்” என்றார்.

Tags: Anurag Thakurhimachal pradesh
Share
Tweet
SendShare
Previous Post

இந்திய மகளீர் மல்யுத்த அணிக்கு பிரதமர் வாழ்த்து!

Next Post

தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு

Related News

அனைத்து வார இறுதி நாட்களும் விடுமுறை என வெளியான அறிக்கை உண்மையல்ல; மத்திய அரசு விளக்கம்

இன்றைய தங்கம் விலை!

மகளிர் கட்டணமில்லா பேருந்து சேவை விரிவாக்கம்; நாளை தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் ஜோசப் விஜய்

சரவெடி உற்பத்திக்கு நிபந்தனைகளுடன் அனுமதி – உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி!

அக்.11ம் தேதி முதல் பயன்பாட்டுக்கு வரும் வடபழனி – பூந்தமல்லி மெட்ரோ ரயில் – சிறப்பு தொகுப்பு!

நாட்டுவெடி தயாரித்தபோது ஏற்பட்ட வெடிவிபத்து; மூவர் உயிரிழப்பு

Load More

அண்மைச் செய்திகள்

மக்கள் பிரதிநிதிகளின் அலட்சியப் போக்கால் பின் தங்கிய சிவகங்கை;மக்களின் மனக்குமுறலை விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு….

ப்ளை துபாய் விமானத்தில் நடந்தது என்ன ?; விரிவாக பார்க்கலாம்

முதலமைச்சர் ஜோசப் விஜய் சிறப்பாக செயல்படுகிறார்; உச்சநீதிமன்றம் பாராட்டு

சரவெடி தயாரிக்க விதிக்கப்பட்ட தடை வாபஸ்; பிரதமர் மோடி அரசின் உறுதியான நிலைப்பாடு வெற்றி

சத்தியஞான சபை பெருவெளியில் எந்தவித கட்டுமானமும் மேற்கொள்ளக் கூடாது; கிராம மக்கள் வாக்குவாதம்

குதிரை பேர வழக்கை விசாரிக்க விதிக்கப்பட்ட தடை நவ.23 வரை நீட்டிப்பு

விபிஜி ராம்ஜி திட்டத்தில் பணியாற்றுபவர்களை குறிவைத்து மதபிரசாரம்; குவியும் கண்டனம்

2004ல் நடந்த மாணவி தற்கொலை; ஜெம் வீரமணி மீது மேலும் ஒரு வழக்கு

ஒரே நாளில் 2 தங்கம்; வில்வித்தையில் இந்தியா சாதனை

தனியார் பள்ளிகளிடம் ரூ.100 கோடி மோசடி வழக்கு; 5 இடங்களில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் சோதனை

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies