தமிழ்நாட்டில் நாளை முதல் அரசு பேருந்துகளில் மகளிருக்கான கட்டணமில்லா பேருந்து சேவை தொடங்கப்பட உள்ளது.
தற்போது மாநகர மற்றும் நகர்ப்புறங்களில் இயங்கும் சாதாரணப் பேருந்துகளில் பெண்கள் கட்டணமில்லாமல் பயணித்து வருகின்றனர். இந்த நிலையில் வெற்றி பயண திட்டத்தின் மூலம் மாநகர மற்றும் நகர்ப்புறங்களில் எக்ஸ்பிரஸ், LSS, டீலக்ஸ் பேருந்துகள், மாவட்டங்களுக்கு இடையேயான புறநகர் சாதாரணப் பேருந்துகள் மற்றும் 40 கிலோ மீட்டருக்கு மேற்பட்ட மலைப்பகுதி சாதாரணப் பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணிக்கும் வகையில் திட்டம் விரிவுப்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை நாளை தொடங்கி வைக்க இருக்கும் முதலமைச்சர் விஜய் அது குறித்து எக்ஸ் தளத்தில் பதிவை வெளியிட்டுள்ளார். அதில் நம் அக்கா, பாட்டி, தாய்மார்கள் மற்றும் திருநர்களுக்கு நாளை முதல் கட்டணமில்லா அரசு பேருந்து பயணம் அர்ப்பணிக்கப்படுகிறது என குறிப்பிட்டுள்ளார்.















