சரவெடி உற்பத்திக்கான தடையை உச்ச நீதிமன்றம் நிபந்தனைகளுடன் தளர்த்தியுள்ள நிலையில், வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்புக்குச் சிவகாசி பட்டாசு உற்பத்தியாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.
கடந்த 2018-ஆம் ஆண்டின் தீபாவளிப் பண்டிகைக்குப் பிறகு, நாடு முழுவதும் சரவெடி உற்பத்திக்கும் விற்பனைக்கும் உச்ச நீதிமன்றம் தடை விதித்திருந்தது. இதனைக் தொடர்ந்து, மத்திய மற்றும் தமிழக அரசுகளின் உதவியுடன் பல்வேறு அறிவியல் பூர்வமான ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு, சரவெடிக்கான தடையை நீக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் முறையீடுகள் செய்யப்பட்டு வந்தன.
வழக்குகளை விசாரித்த உச்ச நீதிமன்றம், சில குறிப்பிட்ட நிபந்தனைகளுடன் சரவெடி உற்பத்திக்கான தடையை தற்போது தளர்த்தி உத்தரவிட்டுள்ளது. நீதிமன்றத்தின் இந்த அறிவிப்பு சிவகாசி மக்களுக்குப் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.















