அக்.11ம் தேதி முதல் பயன்பாட்டுக்கு வரும் வடபழனி - பூந்தமல்லி மெட்ரோ ரயில் - சிறப்பு தொகுப்பு!
Oct 1, 2026, 01:13 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

அக்.11ம் தேதி முதல் பயன்பாட்டுக்கு வரும் வடபழனி – பூந்தமல்லி மெட்ரோ ரயில் – சிறப்பு தொகுப்பு!

Manikandan by Manikandan
Oct 1, 2026, 12:28 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

`சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்டதிட்டத்தில் பூந்தமல்லி – வடபழனி இடையேயான மெட்ரோ ரயில் சேவையை வரும் 11 ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி மக்களின் பயன்பாட்டிற்கு தொடங்கி வைக்க உள்ளார். மக்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் இந்த மெட்ரோ ரயில் சேவை குறித்தும் அதன் சிறப்பம்சங்கள் குறித்தும் இந்த செய்தித் தொகுப்பில் சற்று விரிவாக பார்க்கலாம்

டெல்லி, மும்பை போன்ற பெரு நகரங்களை தொடர்ந்து போக்குவரத்து நெரிசலை குறைக்க சென்னை மாநகரிலும் கொண்டு வரப்பட்டது தான் இந்த சென்னை மெட்ரோ ரயில் திட்டம்.சென்னையில் பொதுமக்கள் அதிகளவு கூடும் இடங்களான சென்ட்ரல்,கோயம்பேடு, கிண்டி மற்றும் விமான நிலையம் உள்ளிட்ட முக்கிய பகுதிகளை மையமாக கொண்டு முதற்கட்டத்தில் 54 கி.மீ தொலைவிற்கு இரண்டு வழித்தடத்தில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

குறைந்த கட்டணம் மற்றும் விரைவான பயணம் என்பதை தாண்டி மழை, வெள்ளம் போன்ற பேரிடர் காலங்களிலும் தங்கு தடையின்றி இயங்கும் சேவை என்பதால் சென்னை மாநகர மக்கள் மத்தியில் மெட்ரொ ரயில் சேவை பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. முதற்கட்ட சேவைகளை தொடர்ந்து இரண்டாம் கட்டமாக 118 கி.மீட்டர் தொலைவிலான மெட்ரோ வழித்தடங்களுக்கான பணிகள் விரைவாக நடைபெற்று வருகின்றன. அதன் ஒரு பகுதியாக சென்னை பூந்தமல்லி முதல் வடபழனி வரையிலான பணிகள் நிறைவு பெற்றிருக்கும் நிலையில் அதனை வரும் அக்டோபர் 11 ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி மக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைக்க உள்ளார்.

பூந்தமல்லி நெடுஞ்சாலை மற்றும் ஆற்காடு சாலையின் குறுகிய பகுதிகளின் கடும் போக்குவரத்து நெரிசலை குறைப்பதோடு மக்களின் நேர விரயத்தையும் வெகுவாக குறைக்கும் என்பதால் இந்த வழித்தடம் அன்றாடம் பயணம் மேற்கொள்ளும் மக்களுக்கு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது. உலகிலேயே முதல்முறையாக வடபழனி – போரூர் வழித்தட ஆற்காடு சாலையில் ஒரே தூணில் 4 ரயில்கள் வந்து செல்லவும்,ஒரு லூப் லைன் என சேர்த்து 5 தண்டவாளங்கள் 4 கிமீ தொலைவிற்கு இரட்டை அடுக்குகளை கொண்ட மெட்ரோ ரயில் வழித்தடமாக இந்த வழித்தடம் அமைந்துள்ளது

பூந்தமல்லி புறவழிச்சாலை, பேருந்து நிறுத்தம், அரசு மருத்துவமனை, கரையான்சாவடி, குமணன்சாவடி, காட்டுபாக்கம், ஐயப்பன்தாங்கல், தெள்ளியாரகரம், போரூர் புறவழிச்சாலை, போரூர் சந்திப்பு, ஆலப்பாக்கம், காரம்பாக்கம், வளசரவாக்கம், ஆழ்வார் திருநகர், விருகம்பாக்கம், சாலிகிராமம், வடபழனி என 17 மெட்ரோ நிலையங்கள் பல்வகை சிறப்பம்சங்களுடன் அமைந்துள்ளன. ஒவ்வொரு மெட்ரோ ரயில் நிலையத்திலும் மின் தூக்கி, நகரும் படிக்கட்டுகள், அறிவிப்பு பலகை, கழிப்பறை வசதி, அவசர உதவி வழிகாட்டு நெறிமுறை மற்றும் தண்டவாளம் அருகே பயணிகளின் பாதுகாப்பிற்கு கண்ணாடி தடுப்பு அமைப்பு நிறுவப்பட்டுள்ளது. மேலும் வடபழனி மற்றும் பூந்தமல்லி புறவழிச்சாலை மெட்ரோ நிலையங்களில் அமைக்கப்பட்டுள்ள நடைபாதை மேம்பாலம் பயணிகளின் பயன்பாட்டிற்கு எளிமையாக அமையும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

பூந்தமல்லி முதல் வடபழனி வரையிலான மெட்ரோ ரயில் சேவை அப்பகுதிகளில் நிலவும் கடும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வாக அமையும் என்பதோடு, நாள்தோறும் பணிக்கு செல்வோர், சொந்த வேலைக்காக வெளியே செல்வோ என அனைத்து தரப்பு மக்களுக்கும் தாங்கள் செல்ல வேண்டிய இடங்களுக்கு உரிய நேரத்தில் செல்வதற்கும் பெரும் பங்களிப்பை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது

Tags: ModiMetroinauguratevadapalani
Share
Tweet
SendShare
Previous Post

நாட்டுவெடி தயாரித்தபோது ஏற்பட்ட வெடிவிபத்து; மூவர் உயிரிழப்பு

Related News

நாட்டுவெடி தயாரித்தபோது ஏற்பட்ட வெடிவிபத்து; மூவர் உயிரிழப்பு

மக்கள் பிரதிநிதிகளின் அலட்சியப் போக்கால் பின் தங்கிய சிவகங்கை;மக்களின் மனக்குமுறலை விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு….

ப்ளை துபாய் விமானத்தில் நடந்தது என்ன ?; விரிவாக பார்க்கலாம்

முதலமைச்சர் ஜோசப் விஜய் சிறப்பாக செயல்படுகிறார்; உச்சநீதிமன்றம் பாராட்டு

சரவெடி தயாரிக்க விதிக்கப்பட்ட தடை வாபஸ்; பிரதமர் மோடி அரசின் உறுதியான நிலைப்பாடு வெற்றி

சத்தியஞான சபை பெருவெளியில் எந்தவித கட்டுமானமும் மேற்கொள்ளக் கூடாது; கிராம மக்கள் வாக்குவாதம்

Load More

அண்மைச் செய்திகள்

அக்.11ம் தேதி முதல் பயன்பாட்டுக்கு வரும் வடபழனி – பூந்தமல்லி மெட்ரோ ரயில் – சிறப்பு தொகுப்பு!

குதிரை பேர வழக்கை விசாரிக்க விதிக்கப்பட்ட தடை நவ.23 வரை நீட்டிப்பு

விபிஜி ராம்ஜி திட்டத்தில் பணியாற்றுபவர்களை குறிவைத்து மதபிரசாரம்; குவியும் கண்டனம்

2004ல் நடந்த மாணவி தற்கொலை; ஜெம் வீரமணி மீது மேலும் ஒரு வழக்கு

ஒரே நாளில் 2 தங்கம்; வில்வித்தையில் இந்தியா சாதனை

தனியார் பள்ளிகளிடம் ரூ.100 கோடி மோசடி வழக்கு; 5 இடங்களில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் சோதனை

ஆசிய துப்பாக்கிச் சுடுதலில் இந்தியாவுக்கு தங்கம்; டிராப் பிரிவில் தங்கம் வென்றார் நீரு தண்டா

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3 கொலை சம்பவங்கள்; மோசமான நிலையில் சட்டம் ஒழுங்கு

சேலம் ஜாகிர் அம்மாபாளையத்தில் குப்பைகளில் இருந்து எரிசக்தி தயாரிக்கும் திட்டத்துக்கு எதிர்ப்பு; பொதுமக்கள் போராட்டம்

திருச்சி மாநகராட்சி மாமன்ற கூட்டம்; கருப்பு உடை அணிந்து திமுக கவுன்சிலர்கள் பங்கேற்பு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies