நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே, வீட்டில் நாட்டுவெடி பட்டாசுகள் தயாரித்தபோது ஏற்பட்ட வெடிவிபத்தில் கணவன், மனைவி உட்பட 3 பேர் உயிரிழந்தனர்.
பாண்டமங்கலம் மைனர் வீரப்பன்பிள்ளை நகர் பகுதியில் ராஜசேகர் என்பவர் வீட்டின் மேல்மாடியில் பட்டாசுகள் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்ததாக கூறப்படுகிறது. மாலை 4 மணியளவில் திடீரென பயங்கர சத்தத்துடன் பட்டாசுகள் வெடித்ததில், கட்டடம் இடிந்து தரைமட்டமானது. இடிபாடுகளுக்குள் நான்கு பேர் சிக்கியதாக கூறப்படுகிறது. தகவலறிந்து வந்த தீயணைப்புத்துறையினர் மற்றும் போலீசார், விபத்தில் ராஜசேகர், அவரது மனைவி சத்யா உள்ளிட்ட 3 பேரின்
சடலங்களை மீட்டனர். வெடிவிபத்தின் தாக்கத்தால் அருகிலுள்ள வீடுகளின் ஜன்னல் கண்ணாடிகளும் உடைந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.















