ப்ளை துபாய் விமானத்தில் நடந்தது என்ன ?; விரிவாக பார்க்கலாம்
Oct 1, 2026, 11:23 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ப்ளை துபாய் விமானத்தில் நடந்தது என்ன ?; விரிவாக பார்க்கலாம்

Manikandan by Manikandan
Oct 1, 2026, 10:15 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ஃப்ளை துபாய் விமானத்தைத் தரையில் மோதி நொறுக்க திட்டமிட்டிருந்த துணை பைலட்டின் சதியை இந்திய பைலட் துணிச்சலுடன் முறியடித்த சம்பவத்தின் முழு பின்னணியை தற்போது பார்க்கலாம்.

துபாயில் இருந்து 180 பயணிகளுடன் போயிங் 737 மேக்ஸ் 8 என்ற விமானம் இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவை நோக்கி புறப்பட்டது.

விமானம் புறப்பட்ட சில மணி நேரத்தில் விமானிகள் உட்கார்ந்திருந்த கட்டுப்பாட்டு அறையில் பைலட், துணை பைலட் இடையே சண்டை ஏற்பட்டுள்ளது.

தொடர்ந்து, விமானியை துணை விமானி கத்தியால் குத்தியதால் விமானத்தை இயக்குவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.

உடனடியாக, விமானி கட்டுப்பாட்டு அறையை திறந்ததால் விமான ஊழியர்கள் மற்றும் பயணிகள் உதவியுடன் துணை விமானி மடக்கி பிடிக்கப்பட்டார்.

தொடர்ந்து, அதே விமானத்தில் சாதாரண உடையில் பயணித்த வேறு இரண்டு விமானிகளால் விமானம் இயக்கப்பட்டுள்ளது.

நடுவானில் விமானம் பறந்துகொண்டிருந்தபோது, இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறல் விமானம் செங்குத்தாக கீழ் நோக்கி கீழிறங்கியது.

விமானம் 30 ஆயிரம் அடி உயரத்தில் இருந்து சட்டென 10 ஆயிரம் அடிக்குக் கீழே இறங்கி மீண்டும் அதிக உயரத்துக்கு பறந்ததால் பயணிகள் பீதியில் அலறினர்.

உடனடியாக, விமான பணியாளர்கள் அவசர கால எச்சரிக்கைகளை இஸ்ரேல் நாட்டுக்குக் கொடுத்தனர்.

பொது அவசர நிலையை அறிவிக்கும் ‘7700’ என்ற எச்சரிக்கையும், விமானம் வழக்கத்துக்கு மாறாக 15 ஆயிரம் அடி உயரத்தில் தாழ்வாகப் பறந்ததால் ‘ஸ்குவாக் 7500’ என்ற விமான கடத்தல் எச்சரிக்கையும் விடப்பட்டது.

இதனை அறிந்த இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு பாதுகாப்புத்துறை அமைச்சருடன் அவசர ஆலோசனை நடத்தினார்.

விமானம் கடத்தப்பட்டதாக முதலில் தகவல்கள் பரவியதால், பயணிகள் விமானத்தைச் சுற்றிவளைக்க இஸ்ரேல் போர் விமானங்கள் களத்தில் இறக்கப்பட்டன.

அதற்குள் பயணிகள் விமானம், ஜோர்டன் வான்வெளிக்குள் நுழைந்து சிறிது நேரத்தில் சவுதி அரேபியா நோக்கி திரும்பியது.

பின்னர், சவுதி அரேபியாவில் உள்ள தபூக் விமான நிலையத்தில் பத்திரமாக விமானம் தரையிறக்கப்பட்டதால் பயணிகள் மகிழ்ச்சியடைந்தனர்

இது குறித்து தீவிர விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ள நிலையில், நடுவானில் நடந்த சம்பவம் சர்வதேச அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags: flightstabbedfightfly dubaiindian pilot
Share
Tweet
SendShare
Previous Post

முதலமைச்சர் ஜோசப் விஜய் சிறப்பாக செயல்படுகிறார்; உச்சநீதிமன்றம் பாராட்டு

Related News

முதலமைச்சர் ஜோசப் விஜய் சிறப்பாக செயல்படுகிறார்; உச்சநீதிமன்றம் பாராட்டு

சரவெடி தயாரிக்க விதிக்கப்பட்ட தடை வாபஸ்; பிரதமர் மோடி அரசின் உறுதியான நிலைப்பாடு வெற்றி

சத்தியஞான சபை பெருவெளியில் எந்தவித கட்டுமானமும் மேற்கொள்ளக் கூடாது; கிராம மக்கள் வாக்குவாதம்

மதுரை மீனாட்சியம்மன் கோயில் கும்பாபிஷேகத்தில் தரிசன அனுமதி வழங்கியதில் முறைகேடு ?

குதிரை பேர வழக்கை விசாரிக்க விதிக்கப்பட்ட தடை நவ.23 வரை நீட்டிப்பு

விபிஜி ராம்ஜி திட்டத்தில் பணியாற்றுபவர்களை குறிவைத்து மதபிரசாரம்; குவியும் கண்டனம்

Load More

அண்மைச் செய்திகள்

ப்ளை துபாய் விமானத்தில் நடந்தது என்ன ?; விரிவாக பார்க்கலாம்

2004ல் நடந்த மாணவி தற்கொலை; ஜெம் வீரமணி மீது மேலும் ஒரு வழக்கு

ஒரே நாளில் 2 தங்கம்; வில்வித்தையில் இந்தியா சாதனை

தனியார் பள்ளிகளிடம் ரூ.100 கோடி மோசடி வழக்கு; 5 இடங்களில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் சோதனை

ஆசிய துப்பாக்கிச் சுடுதலில் இந்தியாவுக்கு தங்கம்; டிராப் பிரிவில் தங்கம் வென்றார் நீரு தண்டா

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3 கொலை சம்பவங்கள்; மோசமான நிலையில் சட்டம் ஒழுங்கு

சேலம் ஜாகிர் அம்மாபாளையத்தில் குப்பைகளில் இருந்து எரிசக்தி தயாரிக்கும் திட்டத்துக்கு எதிர்ப்பு; பொதுமக்கள் போராட்டம்

திருச்சி மாநகராட்சி மாமன்ற கூட்டம்; கருப்பு உடை அணிந்து திமுக கவுன்சிலர்கள் பங்கேற்பு

பேருந்து உரிமையாளர்களின் வேலைநிறுத்தம் வாபஸ்; பேச்சுவார்த்தையில் உடன்பாடு

பட்டினம்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க எதிர்ப்பு; மீனவர்கள் போராட்டம்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies