மாநிலங்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் உள்பட 9 எம்பிக்கள் வரும் 21-ஆம் தேதி பதவியேற்க உள்ளனர்.
பாஜகவைச் சேர்ந்த ஜெய்சங்கர் உள்பட பாஜக எம்பிக்கள் உள்ளிட்ட 9 எம்பிக்கள் வரும் 21-ஆம் தேதி காலை 11 மணிக்கு நடைபெறும் பதவியேற்பு நிகழ்ச்சியில் மாநிலங்களவை உறுப்பினர்களாக நியமனம் செய்யப்படுகின்றனர்.
மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் குஜராத் மாநிலத்தின் காந்திநகரில் இருந்து மாநிலங்ளவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
ஜெய்சங்கர் கடந்த 2019-ஆம் ஆண்டு குஜராத்தில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.