ஊழல் திமுக ஆட்சியில் கனிம வளக் கொள்ளை!-அண்ணாமலை
Jul 5, 2025, 11:56 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

ஊழல் திமுக ஆட்சியில் கனிம வளக் கொள்ளை!-அண்ணாமலை

Web Desk by Web Desk
Aug 23, 2023, 10:42 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திமுக, அளித்த தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றைக் கூட நிறைவேற்றாமல் மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறது என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றச்சாட்டினார்.

இது குறித்து தனது எக்ஸ் பதிவில்,

“என் மண் என் மக்கள் பயணம்”, தமிழ் மொழியை அகஸ்திய முனிவர் பெற்ற மண், எம்பெருமான் சிவபெருமானே விவசாயத்திற்கு வேலியாக காத்து நிற்கும் மண், திக்கெல்லாம் புகழுறும் மண்ணான பொருநை எனும் தாமிரபரணி நதி பாயும் திருநெல்வேலிச் சீமையில், பாரதப் பிரதமர் நரேந்திர மோடி மீது மாறா அன்பு கொண்ட மக்களால் சிறப்புற்றது. இன்றைய நடைபயணத்தில், மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் பூபேந்தர் யாதவும் கலந்து கொண்டு சிறப்பித்ததற்காக, அவருக்கு எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழகத்துக்கு மட்டும், விவசாயத்திற்காக மத்திய அரசு வழங்கிய நிதி ₹2,961 கோடி. நெல்லையில் 20,935 ஹெக்டேர் நிலங்கள், பிரதமரின் பாசன மேம்பாட்டுத் திட்டத்தில் பலனடைந்துள்ளன. நெல்லை, நாட்டின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் இடம்பெற்றுள்ளது. விளையாட்டு அரங்கங்கள், வர்த்தக மையம், பேருந்து நிலையங்கள் என 84 திட்டங்கள், ₹965 கோடி மதிப்பில் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. விரைவில், வந்தே பாரத் ரயிலும் நெல்லைக்கு வரவிருக்கிறது.

பாரதப் பிரதமர் மோடியின் கடந்த ஒன்பது ஆண்டு கால நல்லாட்சியில்,  மத்திய சுற்றுச் சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் பூபேந்தர் யாதவ் அவர்கள் முன்னெடுப்பில், சுற்றுச் சூழல் மற்றும் வனங்களைப் பாதுகாப்பதில் நம் நாடு முன்னேற்றப் பாதையில் உள்ளது.

#EnMannEnMakkal பயணம், தமிழ் மொழியை அகஸ்திய முனிவர் பெற்ற மண், எம்பெருமான் சிவபெருமானே விவசாயத்திற்கு வேலியாக காத்து நிற்கும் மண், திக்கெல்லாம் புகழுறும் மண்ணான பொருநை எனும் தாமிரபரணி நதி பாயும் திருநெல்வேலிச் சீமையில், மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு @narendramodi அவர்கள் மீது… pic.twitter.com/IoQbJDQrCZ

— K.Annamalai (@annamalai_k) August 23, 2023

 

வனப்பகுதிகளின் பரப்பளவு அதிகரித்துள்ளது. சூரிய சக்தி மற்றும் காற்றாலை மின்சார உற்பத்தி அதிகரித்துள்ளது. இந்தியாவில் 75 இடங்களும், தமிழகத்தில் 14 பகுதிகளும் நமது மத்திய அமைச்சர் முயற்சியில் சதுப்பு நிலங்களுக்கான உலகளாவிய ராம்சர் குறியீடு பெற்றிருப்பது நமக்குப் பெருமை. இது யுனெஸ்கோ நமக்கு வழங்கிய அங்கீகாரம். தமிழக மக்கள் சார்பாக நமது மத்திய அமைச்சருக்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

முன்னாள் நிதியமைச்சர் சிதம்பரம், இந்தியாவில் UPI டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை சாத்தியமில்லை என்று பாராளுமன்றத்தில் பேசினார். இன்று, இந்தியா வந்திருக்கும் ஜெர்மனி அமைச்சர், பெங்களூரில் ஒரு காய்கறிக் கடையில் UPI டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை செய்து நமது பிரதமரைப் பாராட்டுகிறார். கடந்த மாதம் மட்டும், 15.34 லட்சம் கோடி ரூபாய் மதிப்புக்கு டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகள் நம் நாட்டில் நடந்துள்ளன. ஆனால் காங்கிரஸும், திமுகவும், நமது நாட்டையும் மக்களையும் குறைத்து மதிப்பிடுகின்றன. இன்று திருநெல்வேலி மாவட்டத்தில் 205 கிராமங்கள் முதன்முறையாக ப்ராட்பேண்ட் இணையதள வசதி பெறவுள்ளன. மத்திய அரசின் பாரத் நெட் மூலம் இது சாத்தியமாகிறது. இப்படி ஒவ்வொரு கிராமங்களையும் முன்னேற்ற பாரதப் பிரதமர் நரேந்திர மோடி தொடர்ந்து திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறார்.

மோடியின் முகவரி : திருநெல்வேலி

முத்ரா கடனுதவி மூலம் தொழிலதிபரான திருமதி ராமலட்சுமி, வருடம் ₹6,000 விவசாயிகளுக்கு வங்கிக் கணக்கில் செலுத்தும் திட்டம் மூலம் பயனடையும் சுப்பையா, பிரதமரின் அனைவருக்கும் வீடு திட்டத்தில் வீடு பெற்ற ஆறுமுகம், தூய்மை இந்தியா திட்டத்தின் மூலம் கழிப்பறை வசதி பெற்ற திருமதி சரஸ்வதி, செல்வமகள் சேமிப்புத் திட்டத்தின் மூலம் பலனடைந்துள்ள திரௌபதி, இவர்கள்தான் பாரதப் பிரதமர் மோடி அவர்களின் முகவரி.

ஆனால் திமுகவோ, தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றைக் கூட நிறைவேற்றாமல் மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறது. வற்றாத ஜீவநதியான தாமிரபரணி, இன்று, குடிக்கவோ குளிக்கவோ உகந்ததற்ற அளவுக்கு மாசுபடிந்து கிடக்கிறது. ஆனால் திமுகவுக்கு, டாஸ்மாக் விற்பனைதான் முக்கியம். உலக அளவில் காலநிலை மாற்றத்தில் அதிக ஆபத்து சந்திக்கும் பகுதிகளில் முதல் ஐம்பது இடத்தில் தமிழகமும் இருப்பது வேதனை. திமுக அமைச்சர் சிவ மெய்யநாதனோ, மெத்தனமாக இருக்கிறார்.

மத்திய அமைச்சர் பூபேந்தர் யாதவ் அவர்கள் தலையிட்டு, தாமிரபரணி நதியை மீட்டுத் தர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.

நீர் நிலைகளைப் பராமரிக்கும் பணியில், 75,000 பேருக்கு வேலைவாய்ப்பு தருவோம் என்று வாக்குறுதி கொடுத்த திமுக, நீர்நிலைகளில் மணல் கடத்துபவர்களுக்குத்தான் வேலைவாய்ப்பு கொடுத்திருக்கிறது. அந்த அளவுக்கு ஊழல் திமுக ஆட்சியில் கனிம வளக் கொள்ளை நடக்கிறது. 10 லட்சம் வேலைவாய்ப்பு, நாங்குநேரி சிறப்பு பொருளாதார மண்டலம், கங்கைகொண்டான் சிப்காட் என திருநெல்வேலிக்கான ஒரு வாக்குறுதியைக் கூட திமுக நிறைவேற்றவில்லை. திமுக ஆட்சியின் சட்டம் ஒழுங்கு சீர்குலைவில், திமுக பெண் கவுன்சிலர்களுக்கே பாதுகாப்பில்லை. தான் கூறிய நபர்களுக்குத்தான் வாக்களிக்க வேண்டும் என்று கொலை மிரட்டல் விடுக்கிறார் திமுக பொறுப்பாளர். திமுக மேயர் சரவணன் மீது 35 கவுன்சிலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதை எதிர்த்து திமுக போராட்டப் பிரிவு தலைவி  கனிமொழி போராடுவாரா?

நெல்லை எங்கள் எல்லை, குமரி எங்கள் தொல்லை என்றார் மறைந்த திமுக தலைவர் கருணாநிதி. நெல்லையும் இனிமேல் திமுகவுக்குத் தொல்லைதான் என்று கூறாமல் கூறியிருக்கிறார்கள் இன்று பெரும் திரளாகக் கூடியிருக்கும் நெல்லை மக்கள்.

வரும் பாராளுமன்றத் தேர்தலில், மாண்புமிகு பாரதப் பிரதமர் மோடி அவர்களை மூன்றாவது முறையாக மீண்டும் பிரதமராக வெற்றி பெறச் செய்வோம். ஊழல் திமுக காங்கிரஸ் கூட்டணியை முழுமையாகப் புறக்கணிப்போம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags: k Annamalai Bjpannamalai bjp
ShareTweetSendShare
Previous Post

செயற்கை நுண்ணறிவு கலைப் படைப்புகளுக்குக் காப்புரிமை தகுதியற்றவை- அமெரிக்க நீதிமன்றம்

Next Post

நாடாளுமன்றம் தேசத்தின் நலனுக்காகவே செயல்படுகிறது!-குடியரசுத் துணை தலைவர் ஜெகதீப்தங்கர்

Related News

உள்நாட்டில் தயாரிக்கும் இந்தியா : இஸ்ரேலின் AIR LORA சூப்பர்சோனிக் ஏவுகணை!

சீனாவை மிரட்டும் இந்தியா : கடலுக்கடியில் கண்காணிப்பு – ஆஸி.,யுடன் கைகோர்ப்பு!

அதிநவீன கடல் அரக்கன் : INS Tamal-யை களமிறக்கிய இந்திய கடற்படை!

அதிர்ச்சியூட்டும் RTI : சிசிடிவி இல்லாத காவல் நிலையங்கள்!

ஆய்வக பயிற்றுநர்கள் நியமனத்தில் சிக்கல் : தனியாருக்கு தாரை வார்க்கும் முடிவுக்கு எதிர்ப்பு!

சீனாவுக்கு செக் : கொழும்பு கப்பல் கட்டும் தளத்தை வாங்கிய இந்தியா!

Load More

அண்மைச் செய்திகள்

பெண் பிள்ளைகளுக்கு அரசுப் பள்ளிகளில் கூட பாதுகாப்பில்லை : நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

சக்தியை நிரூபித்த இந்தியா : 3 வாரங்களாக கேரளாவில் தவிக்கும் F-35B போர் விமானம்!

கொடூரமாக கொலை செய்யப்பட்ட 13 வயது சிறுவன் : கேள்விக்குறியான தமிழகத்தின் சட்டம் – ஒழுங்கு?

தந்தையின் சினிமா மோகம் : பூர்வீக சொத்தை இழந்த நகைச்சுவை நடிகர்!

விசிக நிர்வாகிகளால் அபகரிக்கப்பட்ட நிலம் : மீட்டுத் தரக் கோரி மாற்றுத்திறனாளி மகனுடன் மூதாட்டி தர்ணா!

கொக்கைன் போதைப்பொருள் வழக்கில் காங்கிரஸ் நிர்வாகி கைது!

மக்கள் விரோத திமுக ஆட்சியை அகற்றுவதே சுற்றுப்பயணத்தின் நோக்கம் : எடப்பாடி பழனிசாமி

திமுகவின் திறனற்ற ஆட்சியில் கல்வித்துறை சீரழிந்து வருகிறது : நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

திருப்புவனம் காவல்நிலைய மரணம் : பணியிடை நீக்கம் செய்யப்பட்ட டிஎஸ்பி-யிடம் நீதிபதி விசாரணை!

புரி ஜெகந்நாதர் கோயில் ரத உற்சவம் கோலாகலம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies