இராஜஸ்தானின் உதயபூரில் நடைபெற்ற காமன்வெல்த் நாடாளுமன்றச் சங்கத்தில் 9-வது இந்திய மண்டல மாநாட்டின் நிறைவு விழாவில் குடியரசுத் துணை தலைவர் ஜெகதீப்தங்கர் பங்கேற்று உரையாற்றினார்.
கூட்டத்தில் உரையாற்றிய குடியரசு துணைத் தலைவர்,
ஜனநாயகத்தின் அடிப்படைக் கொள்கைகளைப் பாதுகாப்பதற்கு இந்தியா எப்போதும் பாடுபட்டு வருகிறது. உலகம் நம்மை நன்கு அறியும்; நாம் ஜனநாயகத்தின் தாயகமாக உள்ளோம். நமது ஜனநாயகம் உலகில் தனித்துவமானது, ஏனென்றால் இந்தியா கிராமம், மாநிலம் மற்றும் மத்திய மட்டங்களில் நிர்வாகத்தைக் கொண்ட அரசியலமைப்புடன் கூடிய ஜனநாயகத்தை நமது நாடு கொண்டுள்ளது.
ஜனநாயக அமைப்புகள் மூலம் தேசத்தை வலுப்படுத்துவதில் மக்கள் பிரதிநிதிகளின் பங்கு மிக முக்கியமானது. தொழில்நுட்ப அம்சங்களிலும் அதிக கவனம் செலுத்தவேண்டும்.
மக்கள் பிரதிநிதி என்ற முறையில் ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினரும் மக்களின் பிரச்சனைகளுக்கு அர்த்தமுள்ள தீர்வைக் காண்பதற்கான பொறுப்பைக் கொண்டுள்ளனர். மக்கள் பிரதிநிதிகள் மக்களுக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டும். மற்றவர்கள் போற்றத் தகுந்த நடவடிக்கைகளை எடுத்து அவர்கள் எடுத்துக்காட்டாக இருக்க வேண்டும்.
நான் வேதனையுடனும், ஆழ்ந்த பொறுப்புணர்வுடனும் சொல்கிறேன், உரையாடல், விவாதம் ஆகியவற்றுக்கான ஜனநாயகக் கோயில்களாக உள்ள சபைகளின் நடவடிக்கைகள் இப்போதெல்லாம், இடையூறுகளால் பாதிக்கப்படுகின்றன. இத்தகைய மோசமான சூழ்நிலையின் விளைவாக, நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற நடவடிக்கைகள் மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன. சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்ற நடவடிக்கைகளுக்கு இடையூறு விளைவிப்பது ஜனநாயக மாண்புகளுக்கு எதிரானது.
நிர்வாகத்தில் நிர்வாகப் பொறுப்பு மற்றும் நிதிக் கட்டுப்பாட்டை உறுதி செய்வது மக்கள் பிரதிநிதிகளின் தலையாய கடமையாகும். மக்கள் பிரதிநிதிகள் மிக முக்கியமான அரங்கில் பொதுமக்களைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறார்கள். மக்கள் பிரதிநிதிகளின் அவைகள் செயல்படவில்லை என்றால் யாருக்கு லாபம்? மக்களின் பிரச்சினைகளை எழுப்புவதற்கும் கொள்கைகளை வடிவமைப்பதற்கும் மக்கள் பிரதிநிதிகளுக்கு வாய்ப்பு கிடைக்காமல் போகும். இதைச் சிந்திக்க வேண்டும்.
ஜனநாயகத்தின் வெற்றிக்கு நாடாளுமன்றம், சட்டமன்றம், நிர்வாகத்துறை, நீதித்துறை ஆகியவை நல்லிணக்கத்துடனும், செயல்படுவதுடனும் ஒற்றுமையாக செயல்பட வேண்டும்.
நாடாளுமன்ற ஜனநாயகத்தின் கட்டமைப்பிற்குள் அரசாங்கமும் எதிர்க்கட்சிகளும் முக்கிய அங்கம் வகிக்கின்றன. அரசுக்கும் எதிர்க்கட்சிக்கும் இடையிலான ஒருங்கிணைப்பு முக்கியமானது. அதை இங்கு காணமுடியவில்லை. மக்களுக்குச் சேவை செய்வதே நமது குறிக்கோளாக இருக்க வேண்டும். அந்த ஆரோக்கியமான செயல்பாட்டிலிருந்து நாம் வெகு தொலைவில் இருக்கிறோம். அரசும் எதிர்க்கட்சியும் இணைந்து செயல்பட வேண்டும்.
நாடாளுமன்றம் தேசத்தின் நலனுக்காகவே செயல்படுகிறது.
சுதந்திரத்தின் நூற்றாண்டு விழாவைக் கொண்டாடும் 2047 ம் ஆண்டில், நாடு அனைத்து துறைகளிலும் உச்சத்தில் இருக்கும் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்றத்தில் சரியான செயல்பாட்டின் மூலம் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் அல்லது சட்டமன்ற உறுப்பினர் அரசாங்கத்தை வழிநடத்த முடியும்.
இந்த அச்சுறுத்தும் அதிகார தரகர்களிடமிருந்து நமது அதிகார வழித்தடங்கள் முழுமையாக சுத்திகரிக்கப்பட்டுள்ளன, இந்த நாட்களில் யாரும் முடிவுகளை எடுக்க முடியாது.
ஜனநாயகக் கொள்கைகள் மற்றும் நிர்வாகத்தை வலுப்படுத்துவதற்கான கூட்டு அர்ப்பணிப்பு நமது தேசத்தின் நல்வாழ்வு மற்றும் முன்னேற்றத்திற்கான அசைக்க முடியாத அர்ப்பணிப்புக்கு ஒரு சான்றாகும். அனைவருக்கும் ஒளிமயமான, வளமான எதிர்காலத்தை உருவாக்க நாம் அனைவரும் ஒன்றிணைந்து பாடுபடுவோம் எனத் தெரிவித்தார்.