இந்தியாவில் முதலீடுகள் அதிகரிப்பு: தென்னாப்பிரிக்காவில் பிரதமர் மோடி பெருமிதம்!
Sep 14, 2026, 02:46 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இந்தியாவில் முதலீடுகள் அதிகரிப்பு: தென்னாப்பிரிக்காவில் பிரதமர் மோடி பெருமிதம்!

Sivasubramanian P by Sivasubramanian P
Aug 23, 2023, 02:42 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ஜி.எஸ்.டி. மற்றும் புதிய திவால் சட்டத்திற்குப் பிறகு, இந்தியாவில் முதலீடுகள் அதிகரித்திருக்கிறது என்று பாரதப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்திருக்கிறார்.

தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் நகரில் பிரிக்ஸ் உச்சி மாநாடு நேற்று தொடங்கியது. 24-ம் தேதிவரை நடைபெறும் இம்மாநாட்டில் கலந்துகொள்ளும்படி, தென்னாப்பிரிக்க அதிபர் சிரில் ரமபோஸா பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுத்தார். இதை ஏற்று பிரதமர் நரேந்திர மோடி நேற்று காலை தென்னாப்பிரிக்கா புறப்பட்டுச் சென்றார். மாலை சுமார் 5.30 மணியளவில் ஜோகன்னஸ்பர்க் நகரை பிரதமர் சென்றடைந்தார்.

அங்கு அவருக்கு தென்னாப்பிரிக்க பாரம்பரிய முறைப்படி உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. முதலில் விமானத்தில் இருந்து இறங்கிய பிரதமர் மோடியை, அந்நாட்டின் துணை அதிபர் பால் ஷிபகோஸா வரவேற்றார். அதேபோல, தென்னாப்பிரிக்காவில் வசிக்கும் இந்தியர்கள் “பாரத் மாதா கி ஜெய், வந்தே மாதரம்” என்று கோஷமிட்டபடியே பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து, அந்நாட்டு ஆண்களும் பெண்களும் அடங்கிய நடனக் குழுவினர், பாரம்பரிய உடையடைந்தபடி பிரதமர் மோடியை நடனமாடி வரவேற்றனர்.

பின்னர், “பிரிக்ஸ்” வர்த்தக அமைப்பு ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது, “உலகப் பொருளாதாரம் மந்தமான நிலையில் இருந்தபோது, இந்தியாவின் பொருளாதாரம் வேகமாக வளர்ந்தது. இதன் காரணமாக, உலக பொருளாதாரத்தில் இந்தியா மிக வேகமாக வளர்ந்து வருகிறது. ஆகவே, இந்தியா விரைவில் 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை எட்டும். அதேபோல, டிஜிட்டல் பணப் பரிவர்த்தனையிலும் உலகளவில் இந்தியா முன்னிலையில் உள்ளது. இங்குள்ள தெருவோரக் கடைகளில்கூட யு.பி.ஐ. வசதி இருக்கிறது.

இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சி மற்றும் பாதுகாப்பு துறைகளிலும் தனியார் முதலீடுகள் ஈர்க்கப்பட்டு வருகிறது. பரஸ்பர நம்பிக்கை மற்றும் ஒத்துழைப்பு இருந்தால் தெற்காசிய நாடுகள் மிகப்பெரிய வளர்ச்சியை எட்ட முடியும். கடந்த சில ஆண்டுகளில் இந்தியாவில் தொழில் செய்வதற்கு உகந்த சூழல் மேம்பட்டுள்ளது. குறிப்பாக, ஜி.எஸ்.டி. மற்றும் புதிய திவால் சட்டத்திற்கு பிறகு, இந்தியாவில் முதலீடுகள் அதிகரித்துள்ளது. மேலும், சூரிய ஆற்றல், காற்றாலை, மின்சார வாகனம், பசுமை ஹைட்ரஜன் உள்ளிட்ட துறைகளின் உற்பத்தி மையமாகவும் இந்திய மாறி வருகிறது” என்று குறிப்பிட்டார்.

Tags: Narendra ModiModi
Share
Tweet
SendShare
Previous Post

நாடாளுமன்றம் தேசத்தின் நலனுக்காகவே செயல்படுகிறது!-குடியரசுத் துணை தலைவர் ஜெகதீப்தங்கர்

Next Post

இந்தியா அயர்லாந்து மூன்றாவது டி20 போட்டியில் புதிய வீரர்கள்!

Related News

கோலாகலமாக நடைபெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் தேரோட்டம்; ஏராளமானோர் பங்கேற்பு

மதுராந்தகம் உள்ளிட்ட 3 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிப்பு; சீமான் அதிரடி

உணவிலும், காங்கிரஸ் கட்சி அரசியல் செய்து வருகிறது; கிரண் ரிஜிஜூ கண்டனம்

விநாயகர் சதுர்த்தி விழா – கோயம்பேடு சந்தையில் களைகட்டிய விற்பனை!

சர்வதேச விவகாரங்களில் செல்வாக்கு செலுத்தும் BRICS, G20 மற்றும் SAARC : வேறுபாடுகள் என்ன? – சிறப்பு தொகுப்பு!

மாற்றி அமைக்கப்படும் சர்வதேச ஒழுங்கு : பிரிக்ஸ் மாநாடு மூலம் இந்தியா மேற்கொண்ட ராஜதந்திர நகர்வு என்ன? – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

லண்டன் பயணம் குறித்து முதல்வர் விஜய் விளக்கம் அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

செயற்கை நுண்ணறிவை (AI) ஆயுதமாக பயன்படுத்தக்கூடாது – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு!

திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவம் – திருக்குடைகள் நன்கொடை!

ஹிந்து மத துறவியின் பாதங்களை தொட்டு ஆசி பெற்ற ஈரான் அதிபர் – வீடியோ வைரல்!

டாலருக்கு மாற்றாக பிரிக்ஸ் கரன்சி? : இந்தியா கொண்டு வரும் புதிய நாணயப் புரட்சி – சிறப்பு தொகுப்பு!

சுத்திகரிக்கப்படாமல் காவிரியில் கலக்கும் பெங்களூரு கழிவு நீர் – அமைச்சர் ராமலிங்க ரெட்டி

பிரிக்ஸ் மாநாட்டில் ராமேஸ்வரம் கோயிலின் பிரகாரத்தை திரையில் முன்னிறுத்திய பிரதமர் – நயினார் நாகேந்திரன் நன்றி!

தனியார் BOOKING APPS களின் dummy chart முறைகேடு – ஆம்னி பேருந்துகளின் புதிய கொள்ளை!

திருச்சியில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க வேண்டும் – மதிமுக எம்.பி துரை வைகோ வலியுறுத்தல்!

தமிழக காவல் துறையில் 29,108 புதிய பணியிடங்கள் – முதலமைச்சர் விஜய் ஒப்புதல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies