பிரதமர் நரேந்தர மோடியின் தலைமையிலான மத்திய அரசின் ஒரு நிலையம் ஒரு தயாரிப்பு திட்டத்தின் கீழ், உள்ளூர் தயாரிப்புகளுக்கான சந்தையை வழங்கவும், விளிம்புநிலை மக்களுக்குக் கூடுதல் வருமான வாய்ப்புகளை உருவாக்கும் நோக்கத்துடனும் மத்திய இரயில்வே அமைச்சகம் ‘ஒரு நிலையம் ஒரு தயாரிப்பு’ என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
இத்திட்டத்தின் மூலம் அந்தந்தப் பகுதியில் பிரபலமான பொருட்கள் மற்றும் பழங்குடியினரால் உருவாக்கப்பட்ட கலைப்பொருட்கள், உள்ளூர் நெசவாளர்களின் கைத்தறி பொருட்கள், கைவினைப் பொருட்கள், ஜவுளிகள், பால் பொருட்கள், உணவு வகைகள், பிற பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் மற்றும் உள்ளூரில் தயாரிக்கப்படும் பொருட்கள் உள்ளிட்டவை அந்தந்த இரயில் நிலையங்களில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
எடுத்துக்காட்டாக, காஞ்சிபுரத்தில் பட்டு சேலை, மதுரையில் சுங்குடி சேலை, திருநெல்வேலியில் பனைப் பொருட்கள், தஞ்சாவூரில் பொம்மைகள் என உள்ளூரில் தயாரிக்கப்படும் பொருட்கள் அந்தந்த இரயில் நிலையங்களில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
ஒரு நிலையம் ஒரு தயாரிப்பு திட்டத்தின் மூலம் உள்ளூர் தயாரிப்புகள் நாட்டு மக்களிடையே பிரபலமாக ஒரு வாய்ப்பாகவும் உள்ளது. இரயில் நிலையங்களுக்கு நாட்டின் ஒவ்வொரு மூலையிலிருந்தும் ஆயிரக்கணக்கான பயணிகள் வருகை தருகின்றனர். மேலும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளும் அடிக்கடி வருகின்றனர். இத்திட்டத்திரன் மூலம் இரயில் பயணிகள் தங்களுக்குப் பிடித்தமான பொருட்களை இரயில் நிலையங்களிலேயே வாங்கிக் கொள்ள முடிகிறது.
எனவே இத்திட்டம் இரயில் பயணிகளிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.