சந்திரயான் -3 என்றால் என்ன ?
சந்திரயான்-3 என்பது இந்தியாவின் விண்வெளி நிறுவனமான இஸ்ரோவால் நிலவுக்கு அனுப்பப்படும் விண்கலத்தின் பெயர். நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்ய அனுப்பப்பட்ட விண்கலம் இது.
LVM-3, உந்துவிசை தொகுதி, லேண்டர், ரோவர் மற்றும் RHAMBHA போன்ற கருவிகள் இவை அனைத்தும் என்ன?
LVM-3 என்றால் என்ன ?அதன் செயல்பாடுகள் என்ன ?
LVM-3 என்பது சந்திரயான் -3 ஐ மேலே கொண்டுச் சென்று பூமிக்கு மேலே ஒரு குறிப்பிட்ட புள்ளியில் வீசும் ஏவுகணை ஆகும். அதனுடன் LVM-3 இன் வேலை முடிவடையும்.
அதன்பிறகு சந்திரயான் -3 எவ்வாறு நிலவை அடையும் ?
LVM-3 ஏவுகணை அதன்வேலையை முடித்த பிறகு, அந்த இடத்தில் இருந்து சந்திரயான்-3 நிலவை நோக்கி பயணிக்கும்.
சந்திரயான் -3 விண்கலத்தின் இருபகுதிகள் என்னென்ன ?
விண்கலத்தில் உந்துவிசை மற்றும் லேண்டர்-ரோவர் தொகுதிகள் என இருப்பகுதிகள் உள்ளது. உந்துவிசை தொகுதியின் முக்கிய வேலை நிலவுக்கு லேண்டர்-ரோவர் பேலோடுகளை எடுத்துச் செல்வதாகும்.
லேண்டர், ரோவர் எவ்வாறு செயல்படும் ?
நிலவின் அருகில் சென்றடைந்த பிறகு, லேண்டர்-ரோவர் உந்துவிசை தொகுதியிலிருந்து தன்னைத்தானே பிரித்து, சந்திரனில் விழும். லேண்டரில் உள்ள என்ஜின்கள் அதன் வீழ்ச்சியை மெதுவாக்கும், அதனால் அது மெதுவாக நிலவில் இறங்கக்கூடும்,
ரோவர் என்பது சக்கரங்களைக் கொண்ட ஒரு சிறிய, தள்ளுவண்டி போன்ற சாதனமாகும். லேண்டர் நிலவில் தரையிறங்கியவுடன், ரோவர் லேண்டரில் இருந்து சறுக்கி நிலவின் மேற்பரப்பில் ஊர்ந்து செல்லும்.
லேண்டர், ரோவர் இரண்டும் நிலவில் என்னென்ன வகையில் ஆய்வுகள் மேற்கொள்கிறது?
நிலவுவின் மணல்பரப்பைப் பகுப்பாய்வு செய்தல், நிலவின் மேற்பரப்பு வெப்பத்தை எவ்வாறு கடத்துகிறது மற்றும் நிலநடுக்க அலைகள் நிலவின் மேற்பரப்பில் எவ்வாறு நகர்கின்றன என்பதை ஆராய்தல் போன்ற சோதனைகளுக்கான கருவிகள் லேண்டர் மற்றும் ரோவர் இரண்டிலும் உள்ளன.
அமெரிக்காவின் அப்பல்லோ விண்கலம் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு நான்கு நாட்களில் நிலவை அடைந்த நிலையில் இப்போது சந்திரயான்-3 நிலவை அடைய ஒரு மாதக் காலம் ஆகிறதே! அது ஏன் ?
சந்திரனுக்கு நேராகவும் விண்கலத்தை ஏவலாம். ஆனால் அதற்கு விண்கலம் மிகவும் பெரியதாக இருக்க வேண்டும். 384,400 கி.மீ தூரம் பயணிக்க, ஏவுகணை அதிக அளவு எரிபொருளைச் சுமந்து செல்ல வேண்டும். எரிபொருள் ஏவுகணையின் எடையை பலமடங்கு கூட்டுகிறது. எனவே அதுவே அதிக எடையுள்ளதாக இருக்கவேண்டும்.
1969 இல் அப்பல்லோ 11 ஐ நிலவுக்குக் கொண்டு சென்ற சாட்டர்ன் V ஏவுகணை 363 அடி உயரம் கொண்டது. LVM-3 142 அடி உயரம் கொண்டது. பெரிய ஏவுகணைகள் மிகவும் விலை உயர்ந்தவை.
விலை ஒரு காரணம் என்றாலும், சந்திரயான்-3 விண்கலம் நிலவை வேகமாக சென்றடைய எந்த அவசரமும் இல்லை. அதனால்தான் பூமியின் ஈர்ப்பு விசையைப் பயன்படுத்தி சந்திரயான்-3,நிலவை நோக்கிச் செல்ல ஒரு பாதையை தேர்வுசெய்கிறது. அதனால் தான் இது நிலவைச் சென்றடைய ஒரு மாதக்காலம் எடுதூக்க கொள்கிறது .
சந்திரயான்-3 நிலவை அடைவதற்கு முன்பு பூமியைப் பலமுறை வட்டமிடுவதும், பின்னர் நிலவை பலமுறை வட்டமிடுவதும் ஏன் ?
சமமான பகுதிகளின் சட்டம் என்று சொல்லப்படும் கெப்லரின் கோள்களின் இயக்கத்தின் இரண்டாவது விதி, அதுதான் ஒரு கோளையும் அதன் துணைக்கோளையும் இணைக்கும் கற்பனைக் கோடு சமமான கால இடைவெளியில் சமமான பகுதிகளைத் துடைக்கிறது என்று கூறுகிறது.இன்னும் சொல்லப் போனால் இந்து விதி, “நீள்வட்ட சுற்றுப்பாதையில் சூரியனைச் சுற்றி வரும் ஒரு கிரகத்தின் பரப்பளவு திசைவேகம் மாறாமல் உள்ளது, இது ஒரு கிரகத்தின் கோண உந்தம் மாறாமல் இருப்பதைக் குறிக்கிறது” என்றும் கூறலாம். கோண உந்தம் நிலையானதாக இருப்பதால், அனைத்து கிரக இயக்கங்களும் பிளானர் இயக்கங்கள் ஆகும், இது மைய விசையின் நேரடி விளைவாகும். இதுதான் கெப்லரின் கோள்களின் இயக்கத்தின் இரண்டாவது விதியாகும்.
அதாவது நீள்வட்டப் பாதையில் நகரும் போது செயற்கைக்கோள் கிரகத்தை நெருங்கும் போது வேகமாகப் பயணிக்கிறது மற்றும் விலகிச் செல்லும்போது வேகம் குறைகிறது. ஒரு பொருள் கிரகத்தை எவ்வளவு தூரம் நெருங்குகிறதோ, அவ்வளவு தூரம் அது கிரகத்திற்கு அருகில் வரும்போது அதிக வேகத்தைப் பெறுகிறது என்பதும் சட்டம்.
சந்திரயான்-3 நிலவை நோக்கிச் செல்லும் போதுமான வேகத்தைப் பெற இந்தச் சட்டத்தைப் பயன்படுத்துகிறோம்.
எனவே, எல்விஎம்-3 பூமிக்கு மேலே வைத்த பிறகு, சந்திரயான்-3 பூமியை, நீள்வட்ட சுற்றுப்பாதையில் தானாகச் சுற்றி வரத் தொடங்கும். அது தொலைதூரப் புள்ளியை அடையும் போது, தரையிலுள்ள கட்டுப் பாட்டு அறையில் உள்ள விண்வெளி விஞ்ஞானிகள் விண்கலத்தின் திசையைச் சிறிது சிறிதாக மாற்றி, அதனை அடுத்த சுற்றுப் பாதைக்குள் கொண்டு நிலைநிறுத்துவார்கள்.
அதன் அடுத்த வளையம் முதல் சுழற்சியை விட பெரியதாக இருக்கும். எனவே, விண்கலம் அதன் இரண்டாவது வளையத்தில் பூமியை நெருங்கும் போது, அது அதிக வேகத்தைப் பெறும். மீண்டும், அது அபோஜி எனப்படும் தொலைதூரப் புள்ளியை அடையும் போது, தரையிலுள்ள கட்டுப் பாட்டு அறையில் உள்ள விண்வெளி விஞ்ஞானிகள் மீண்டும் திசையை சிறிது மாற்றுவார்கள், இதனால் மூன்றாவது சுழற்சியில், விண்கலம் இன்னும் அதிக வேகத்தைப் பெறுகிறது. அத்தகைய 5-6 சுழல்களை முடித்தவுடன், விண்கலம் சந்திரனை நோக்கிச் செல்ல போதுமான வேகத்தைப் பெற்றிருக்கும்.
அது சந்திரனை அடைந்தவுடன், தலைகீழாக , சுழற்சி முறையில் விண்கலம் சந்திரனை நெருங்கும். நிலவின் மேற்பரப்பில் இருந்து சுமார் 100 கிமீ தொலைவில் இருக்கும் போது, தரை இறங்குவதற்குத் தன்னைத்தானே சுற்றுப் பாதையில் இருந்து பிரித்துக்கொண்டு நிலவில் இறங்கத் தொடங்கும்.
நிலவில் லேண்டர் எப்படி இறங்குகிறது?
லேண்டர் உண்மையில் நிலவில் ‘விழும்’. ஆனால் இது நான்கு உந்துதல்களைக் கொண்டுள்ளது – அல்லது இயந்திரங்கள் – இது மேல்நோக்கி உந்துதலை வழங்கும் மற்றும் அதன் இறங்குதலை மெதுவாக்கும்.
நிலவின் மேற்பரப்பை லேண்டர் தொட்ட பிறகு என்ன நடக்கும்?
லேண்டர் மெதுவாக தரையிறங்கிய பிறகு, எல்லாம் சரியாக இருப்பதை உறுதி செய்யும். பின்னர், லேண்டரின் கீழ் உள்ள கதவு திறக்கும். இதன் வழியே சறுக்கிய படியே ரோவர் நிலவின் மேற்பரப்பில் சரிந்து கீழே விழும்.
ரோவர் என்றால் என்ன? அது எப்படி நிலவை ஆய்வு செய்கிறது?
சக்கரங்கள் பொருத்தப்பட்ட, ரோவர் நிலவின் மேற்பரப்பில் கரப்பான் பூச்சியைப் போல ஊர்ந்து, மண்ணை எடுத்து சோதனைகள் செய்யும்.
லேண்டர் மற்றும் ரோவர் பூமிக்கு திரும்புமா?
இவை எல்லாமே அதற்குரிய செயலாற்றல் முடிந்த நிலையிலும் நிலவிலேயே இருக்கும். ஒருவேளை அடுத்து நிலவுக்குச் செல்லும் விண்வெளி வீரர் எடுத்து வர எண்ணினால் எடுத்துக்கொண்டுப் பூமிக்கு வரலாம் .
லேண்டர் மற்றும் ரோவர் நிலவில் செய்யும் சோதனைகள் பற்றிய தகவல்களை நாம் எப்படிப் பெறுவது?
வானொலி நிலையங்கள் எப்படி ஒலிபரப்பாகிறதோ அது போலத்தான் லேண்டர் மற்றும் ரோவர் நிலவில் செய்யும் சோதனைகள் பற்றிய தகவல்களை நாம் பூமியில் இருந்தபடி பெறுகிறோம் . ஒலிபரப்புகள் ஒலி அலைகள் மூலம் செய்யப்படுகின்றன, ஒலிபரப்புவதற்கு ஒரு ஊடகம் – காற்று – தேவை. விண்வெளி வழியாக சமிக்ஞைகள் மின்காந்த அலைகள் வடிவில் அனுப்பப்படுகின்றன. இதற்கு ஒரு ஊடகம் தேவையில்லை.
லேண்டர் மற்றும் ரோவர் நீண்ட காலம் செயல்படுமா?
லேண்டர் மற்றும் ரோவர் 14 பூமி நாட்களுக்கு உயிருடன் இருக்கும், இது ஒரு நிலவு நாளுக்கு ஒத்திருக்கும். சந்திரன் தனது அச்சில் ஒரு சுற்று சுற்றினால், பூமி 29.5 நாட்களை நிறைவு செய்திருக்கும். ஒரு நிலவு நாள் என்பது நிலவு இரவைப் போலவே சுமார் 14 பூமி நாட்கள் ஆகும். லேண்டர் மற்றும் ரோவருக்கு மின்சாரம் வழங்கும் சோலார் பேனல்களுக்கு சூரிய ஒளி தேவைப்படுவதால், அவை 14 பூமி நாட்கள் ஒரு நிலவு நாளில் உயிருடன் இருக்கும்.
சந்திரயான்-3 திட்டத்திற்கான செலவு என்ன?
சந்திரயான்-3க்கு ரூ.615 கோடி ரூபாய் தான்.
சந்திரயான்-3 இன் முக்கியத்துவம் என்ன? ஏன் சந்திரனுக்கு செல்ல வேண்டும்?
இனி ஆய்வு செய்வதற்கு நிலவில் எதுவும் இல்லை என்ற முடிவுக்கு வந்துவிட்ட மேலை மேலைநாடுகள் நிலவுப் பயணத்துக்கு கிட்டத் தட்ட முற்றுப் புள்ளி வைத்து விட்டன.அமெரிக்க அப்பல்லோ பயணங்களுக்குப் பிறகு சந்திரனைப் புறக்கணித்தன. ஆனால் பாரதத்தின் இஸ்ரோ நிலவின் தென் துருவப் பகுதியில் பனிக்கட்டி இருக்கிறது என்று உறுதியாக காட்டிய பிறகு, மேலை நாடுகளுக்கு மீண்டும் நிலவின் மீது ஆர்வம் ஏற்பட்டுள்ளது.