வரலாறு படைத்தது இந்தியா!
Sep 18, 2025, 07:11 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வரலாறு படைத்தது இந்தியா!

மக்களின் பிரார்த்தனை பலித்தது… வெற்றிகரமாக நிலவின் தென்துருவத்தில் தடம் பதித்தது சந்திரயான்-3: பிரதமர் மோடி வாழ்த்து!

Web Desk by Web Desk
Aug 23, 2023, 06:57 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திட்டமிட்டபடி சரியாக 6.04 மணிக்கு, நிலவில் வெற்றிகரமாகத் தரையிறங்கியது சந்திரயான்-3 விண்கலம். இதன் மூலம் நிலவின் தென்துருவத்துக்கு முதன் முதலில் விண்கலத்தை அனுப்பிய வரலாற்றை இந்தியா படைத்திருக்கிறது. இதையடுத்து, இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி வாழ்த்துத் தெரிவித்திருக்கிறார்.

அமெரிக்கா, ரஷ்யா, சீனா ஆகிய நாடுகள் நிலவின் வடதுருவத்தை ஆராய்வதற்காக விண்கலத்தை அனுப்பின. ஆனால், வித்தியாசமாக நிலவின் தென் பகுதியை ஆய்வு செய்வதற்காக, இந்தியா விண்கலத்தை அனுப்பியது. ஆனால், 2019-ம் ஆண்டு அனுப்பப்பட்ட சந்திரயான்-2 தோல்வியில் முடிந்தது. இதையடுத்து, இந்திய விண்வெளி ஆராய்ச்சி மைய (இஸ்ரோ) விஞ்ஞானிகள் கடந்த 4 ஆண்டுகளாக கடுமையான முயற்சிக்குப் பிறகு, சந்திரயான்-3 விண்கலத்தை உருவாக்கினர்.

சந்திரயான்-3 விண்கலம் கடந்த மாதம் 14-ம் தேதி நிலவின் தென்துருவத்துக்கு அனுப்பப்பட்டது. புவி வட்டப் பாதை பயணத்தை வெற்றிகரமாக முடித்த சந்திரயான்-3, கடந்த 1-ம் தேதி நிலவை நோக்கிய பயணத்தைத் தொடங்கியது. நிலவுப் பயணத்தில் 3ல் 2 பங்கு தூரத்தை கடந்த சந்திரயான்-3, கடந்த 5-ம் தேதி இரவு 7 மணியளவில் நிலவின் சுற்றுவட்டப் பாதைக்குள் செலுத்தப்பட்டது.

இந்த நிலையில், இன்று மாலை 6.04 மணியளவில் சந்திரயான்-3 விண்கலத்தின் ‘லேண்டர்’ சாதனத்தை வெற்றிகரமாக தரையிறக்க இஸ்ரோ விஞ்ஞானிகள் முடிவு செய்தனர். இதற்கான முழு முயற்சியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டனர். இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வைக் காண்பதற்காக இந்தியா மட்டுமல்லாது உலக நாடுகளும் மிகுந்த ஆர்வத்துடன் காத்திருந்தன. உலகம் முழுவதும் உள்ள இந்தியர்கள், சந்திரயான்-3 பத்திரமாகத் தரையிறங்குவதற்காக கோவில்கலில் பிரார்த்தனை செய்தனர்.

Chandrayaan-3 Mission:
'India🇮🇳,
I reached my destination
and you too!'
: Chandrayaan-3

Chandrayaan-3 has successfully
soft-landed on the moon 🌖!.

Congratulations, India🇮🇳!#Chandrayaan_3#Ch3

— ISRO (@isro) August 23, 2023

இந்த நிலையில், திட்டமிட்டபடி, இன்று மாலை சரியாக 6.04 மணிக்கு சந்திரயான்-3 வெற்றிகரமாக நிலவின் மேற்பரப்பபில் கால்பதித்து. இதையடுத்து, இஸ்ரோ விஞ்ஞானிகள் மகிழ்ச்சி வெள்ளத்தில் திளைத்தனர். தென்னாப்பிரிக்காவில் இருந்து காணொலி வாயிலாக சந்திரயான்-3 தரை இறங்கியதைப்  பார்த்துக் கொண்டிருந்த பாரதப் பிரதமர் மோடி, கைதட்டி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். தொடர்ந்து, சந்திரயான்-3 வெற்றிக்காகப் பாடுபட்ட இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு வாழ்த்துத் தெரிவித்தார். அதேபோல, தலைவர்கள் பலரும், நாட்டு மக்களும் இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு வாழ்த்துகளை தெரிவித்திருக்கிறார்கள்.

Tags: PM ModiChandrayaan 3pm modi latest speech
ShareTweetSendShare
Previous Post

சந்திரயான்-3 தரையிறக்கம்: கோவில்களில் சிறப்புப் பிரார்த்தனை!

Next Post

நிலவை வென்றுவிட்டோம்: பிரதமர் மோடி

Related News

எதிர்கால போருக்குத் தயாராகும் இந்தியா : ஒருங்கிணைந்த கட்டளை மையம் அமைக்க முடிவு!

அமெரிக்க காதலி இந்தியாவில் எரித்துக் கொலை : பகீர் கிளப்பும் பின்னணி – நடந்தது என்ன?

கற்பனையில் மிதக்கும் பாக்., ஃபீல்ட் மார்ஷல் : கானல் நீராகுமா இஸ்லாமிய நேட்டோ?

பாகிஸ்தான் பயங்கரவாதிகள் ஒப்புதல் : ஜெய்ஸ்-இ-முகமதுவிற்கு அசிம் முனீர் முழு ஆதரவு!

தீவு ஒன்றுதான் இரு நாடுகளுக்கும் சொந்தமாம் : 360 ஆண்டுகால ரகசியத்தை தாங்கி நிற்கும் தீவு!

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் போட்டியை புறக்கணித்த பாகிஸ்தான் – எச்சரித்த ஐசிசி!

Load More

அண்மைச் செய்திகள்

ஊருக்குள் ஊடுருவும் யானைகளால் பரிதவிக்கும் மக்கள் – செயற்கை நுண்ணறிவை பயன்படுத்த அரசுக்கு கோரிக்கை!

காட்டுமன்னார்கோவில் அருகே கொதிக்கும் எண்ணெயை கணவர் காலில் ஊற்றிய மனைவி கைது!

பதக்கம் வெல்லும் வாய்ப்பை தவறவிட்டார் நீரஜ் சோப்ரா!

மார்கோ படத்தின் இரண்டாம் பாகம் குறித்த அப்டேட்!

கல்வித்துறை செயலாளருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

தீவிரவாதிகள் இறுதிச்சடங்கில் பங்கேற்க ராணுவ தளபதி அசிம் முனீர் உத்தரவிட்டார் – ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் தளபதி பேசிய வீடியோ வைரல்!

கடந்த முறையைவிட அடுத்த முறை பாஜகவின் வெற்றி மேலும் அதிகரிக்கும் : அண்ணாமலை நம்பிக்கை!

மந்தகதியில் மழைநீர் வடிகால் பணிகள் : அம்பலப்படுத்திய தமிழ் ஜனம் செய்தியாளரை தாக்க முயன்ற திமுக கவுன்சிலர் மகன்!

டெலிவரி செய்ய தார் காரில் வந்த ஊழியர்!

திருவண்ணாமலை : இட ஒதுக்கீட்டுக்கு போராடி உயிர்விட்ட 21 தியாகிகளுக்கு நினைவஞ்சலி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies