மும்பை விமான நிலையத்தின் பெருமையைக் கோடக் மகேந்திரா வங்கியின் முன்னணி நிர்வாகிகளில் ஒருவரான ஜெய் கோடக் பிரமிப்புடன் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் முன்னணி தனியார் வங்கி கோட்டக் மகேந்திரா வங்கி. இந்த வங்கியின் தலைவர் உதய் கோடக்கின் மகன் ஜெய் கோடக். இவர், இந்தியாவில் விமானச் சேவை குறித்தும், மும்பை விமான நிலையத்தின் தூய்மை மற்றும் செயல்பாடு குறித்தும் உலக நாடுகளுடன் ஒப்பிட்டுள்ளார்.
ஜெய் கோடக் தனது சமீபத்திய அமெரிக்கப் பயணத்தைப் பற்றி ட்வீட் செய்துள்ளார். அதில், பாஸ்டன் விமான நிலையத்தின் படத்தைப் பகிர்ந்துள்ளார். அதில், திரும்பிய திசை எல்லாம் பயணிகள் நிரம்பி வழிகின்றனர். ஆண், பெண் பேதமின்றி ஒருவர் மீது ஒருவர் இடித்துக் கொண்டு உள்ளனர். பயண அவசரம் காரணமாக, ஒருவரை ஒருவரை முன்னே செல்லும் காட்சியைக் காண முடிகிறது. இந்த நிலையை உறுதிப்படுத்தும் வகையில், அவர், 5 மணி நேரம் லைனில் நின்று செக் செய்து கொண்டதை குறிப்பிட்டுள்ளார்.
மேலும், நகரங்களில் ஒவ்வொரு நாளும் துப்பாக்கி மற்றும் வன்முறை குறித்த தலைப்புச் செய்திகளே அதிகமாக உள்ளது. விமான நிலையங்களின் பாதைகள் மற்றும் விமானங்கள் மிகவும் தாமதமாகச் செல்வதாகவும், இதற்காக, பயணிகள் மணிக்கணக்கில் காத்திருக்க வேண்டிய அவலம் உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
மற்ற நாடுகளில் இருப்பதைக் காட்டிலும், இந்தியாவிற்குத் திரும்பச் செல்வது தாய் நாட்டிற்குத் திரும்பிச் செல்லும் உணர்வு பீறிடுவதாகத் தெரிவித்துள்ளார்.
ஜெய் கோடக் குறிப்பிட்டுள்ள மும்பை சத்ரபதி விமான நிலையம், இந்தியாவிலேயே மிகப் பெரிய 2வது விமானப் போக்குவரத்து மையாகத் திகழ்ந்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் மோடி தலைமையிலான பா.ஜ.க அரசு எடுத்துவரும் அதிரடி நவடிக்கை காரணமாக, இந்தியாவில் உள்ள விமான நிலையங்கள் அனைத்தும், தூய்மைக்கும், பயணிகளின் சேவைக்கும் முதலிடம் அளிக்கப்படுகிறது.
மேலும், சீரான விமானப் போக்குவரத்து மற்றும் பயணிகளுக்குத் தேவையான அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. இதனால், உள்நாட்டுப் பயணிகள் மட்டுமல்லாது, வெளிநாட்டு பயணிகளும் மனம் திறந்து பாராட்டி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.