அமெரிக்க முன்னாள் அதிபர் டொனல்டு ட்ரம்ப் தேர்தல் மோசடி வழக்கில்
கைது செய்யப்பட்டார். இரண்டு லட்சம் அமெரிக்க டாலர்கள் உத்தரவாதத்தின் பேரில் காவல்துறையினர் சில நிமிடங்களில் ட்ரம்ப் பிணையில் வெளியே வந்தார்.
கடந்த 2020 ஆம் ஆண்டு நடந்த அமெரிக்க தேர்தலில் முன்னாள் அதிபர் ட்ரம்ப், தேர்தல் முடிவுகளை முறைகேடாக மாற்ற முயன்றதாகப் புகார் கூறப்பட்டது. பின்பு இது தொடர்பாக ட்ரம்ப் உள்பட 19 பேர் மீது மோசடி வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது.
மேலும் 19 பேருக்கும் அட்லாண்டா நீதிமன்றம் கைது வாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டது. இன்று (25 ஆம் தேதி) தாமாக முன்வந்து ஆஜராக 19 பேருக்கும் அவகாசம் அளிக்கப்பட்டது.
இந்த நிலையில்தான் முன்னாள் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஜார்ஜியா சிறையில் சரணடைந்தார். அதைத் தொடர்ந்து ட்ரம்ப்பின் அடையாளங்கள் சேகரிக்கப்பட்ட பிறகு, இரண்டு லட்சம் அமெரிக்க டாலர்கள் உத்தரவாதத்தின் பேரில் காவல்துறையினர் சில நிமிடங்களில் ட்ரம்ப்பை பிணையில் விடுவித்தனர்.
தனது கைது குறித்து ட்ரம்ப் வெளியிட்டுள்ள பதிவில்,
“இது அமெரிக்காவில் இன்னொரு சோகமான நாள்!” என்று குறிப்பிட்டுள்ளார். இதேபோல் தனது தனி விமானத்தில் ஏறும் பேட்டியளித்த ட்ரம்ப், “வழக்குத் தொடுப்திருப்பது அரசியல் உள்நோக்கம் கொண்டது” என்று குறிப்பிட்டார்.