பள்ளத்தைப் பார்த்த ரோவர்: பாதையை மாற்றி பயணம்!
Aug 19, 2025, 04:47 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பள்ளத்தைப் பார்த்த ரோவர்: பாதையை மாற்றி பயணம்!

Web Desk by Web Desk
Aug 28, 2023, 06:56 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நிலவில் வெற்றிகரமாகத் தரையிறங்கி, ஆராய்ச்சியை மேற்கொண்டிருக்கும் சந்திரயான்-3 விண்கலத்தின் ரோவர், பள்ளத்தைப் பார்த்ததும் தனது பாதையை மாற்றிக் கொண்டு பாதுகாப்பாக பயணிப்பதாக இஸ்ரோ தெரிவித்திருக்கிறது.

2019-ம் ஆண்டு இந்தியாவில் விண்ணில் செலுத்தப்பட்ட சந்திரயான்-2 விண்கலம், கட்டுப்பாட்டை இழந்ததைத் தொடர்ந்து, 4 ஆண்டுகள் கடும் முயற்சிக்குப் பிறகு, சந்திரயான்-3 விண்கலத்தை இஸ்ரோ விஞ்ஞானிகள் உருவாக்கினர். கடந்த மாதம் 14-ம் தேதி விண்ணில் செலுத்தப்பட்ட இந்த விண்கலம் 40 நாட்கள் பயணத்திற்குப் பிறகு, கடந்த 23-ம் தேதி மாலை 6.04 மணியளவில் வெற்றிகரமாக நிலவில் தரையிறக்கப்பட்டது.

இதன் பிறகு, லேண்டரில் இருந்து ரோவர் வெளியேறி நிலவை ஆராய்ச்சி செய்து வருகிறது. பெங்களூரு பீனியாவிலுள்ள இஸ்ரோ கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து, ரோவரின் செயல்பாடுகளை விஞ்ஞானிகள் கண்காணித்து வருகின்றனர். நிலவின் தென்துருவத்தில் வெப்பநிலைப் எப்படி உள்ளது என்பதை ரோவர் நேற்று ஆய்வு செய்து வெளியிட்டது.

Chandrayaan-3 Mission:

On August 27, 2023, the Rover came across a 4-meter diameter crater positioned 3 meters ahead of its location.
The Rover was commanded to retrace the path.

It's now safely heading on a new path.#Chandrayaan_3#Ch3 pic.twitter.com/QfOmqDYvSF

— ISRO (@isro) August 28, 2023

இந்த நிலையில்தான், ரோவர் தனக்கு முன்னாள் பள்ளம் இருப்பதை உணர்ந்து பாதையை மாற்றி இருப்பதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்திருக்கிறார்கள். இதுகுறித்து இஸ்ரோ எக்ஸ் பக்கத்தில் விஞ்ஞானிகள் கூறுகையில், “ரோவரால் 5 மீட்டர் தொலைவில் உள்ளவற்றை உணர முடியும். இந்த சூழலில், 3 மீட்டர் தொலுவிலுள்ள பள்ளத்தை உணர்ந்தது.

அதேசமயம், மேடான பகுதியை கடக்கும் வகையில் ரோவரில் தொழில்நுட்ப வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இந்த சூழலில், தனது பாதையில் 4 மீட்டர் பள்ளம் இருப்பதை ரோவர் உணர்ந்தது. இதையடுத்து, பாதையை மாற்றிய ரோவர், தற்போது புதிய பாதையில் பாதுகாப்பாக பயணித்து வருகிறது” என்று குறிப்பிட்டிருக்கிறார்கள். லேண்டரில் இருந்து ரோவரால் 500 மீட்டர் பயணிக்க முடியும். தற்போது 8 முதல் 10 மீட்டர் தொலைவில் மட்டுமே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: ISROChandrayaan 3isro moon mission chandrayaan 3
ShareTweetSendShare
Previous Post

ஆதித்யா எல்-1: நேரத்தை அறிவித்தது இஸ்ரோ!

Next Post

ஜப்பானின் “ஸ்லிம்” விண்கலம் நிறுத்தி வைப்பு!

Related News

மிஸ் யுனிவர்ஸ் இந்தியா 2025 பட்டத்தை வென்ற மாணிகா விஸ்வகர்மா!

நிர்மலா சீதாராமன் – தங்கம் தென்னரசு சந்திப்பு!

உயர்வுடன் நிறைவடைந்த இந்திய பங்குச்சந்தை!

தோல் புற்றுநோயால் ஐடி ஊழியர் பாதிப்பு – வெற்றிகரமாக சிகிச்சை அளித்த சென்னை சிம்ஸ் மருத்துவமனை!

முதல்வரின் ‘காக்கும் கரங்கள்’ திட்டம் தொடங்கி வைப்பு!

ஓங்கும் புதின் கை : கேள்விக்குறியாகும் உக்ரைன் எதிர்காலம்!

Load More

அண்மைச் செய்திகள்

ஆயுத கொள்முதலை தொடரும் பாகிஸ்தான் : 3-வது ஹேங்கர் ரக நீர்மூழ்கி கப்பலை வழங்கிய சீனா!

எலான் மஸ்க்கால் பணிநீக்கம் செய்யப்பட்ட ட்விட்டர் CEO பராக் அகர்வால்!

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கூரியர் மேனை பாராட்டிய ஆஸி. பெண்!

மனித உடல் உறுப்பு திருட்டு : அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!

தெரு நாய்களுக்கு ஆதரவாக விலங்குநல ஆர்வலர்கள் போராட்டம்!

கரூர் : போலி அறக்கட்டளை நடத்தி பண மோசடி – மாவட்ட ஆட்சியரகத்தில் புகார்!

வெனிசுலா கனமழை : வெள்ளம் சூழ்ந்ததால் மக்கள் அவதி!

கோவிலம்பாக்கம் ஊராட்சி : மதுபோதையில் ஊழியர்களை தாக்கிய ஊராட்சியைச் செயலர்!

தூய்மை பணியாளர்கள் காத்திருப்பு போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைப்பு!

சேலம் : கல்லூரி மாணவனை மிரட்டி ஓரின சேர்க்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies