ஜப்பானின் நிலவு ஆராய்ச்சி “ஸ்லிம்” விண்கலம் இன்று காலை விண்ணில் செலுத்தப்படவிருந்த நிலையில், சாதகமற்ற வானிலை காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டதாக ஜப்பான் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (NHK) தெரிவித்துள்ளது.
ஜப்பான் விண்வெளி ஆய்வு நிறுவனம் (JAXA) ககோஷிமா மாகாணத்தில் உள்ள தனேகாஷிமா (Tanegashima) விண்வெளி மையத்தில் இருந்து “ஸ்லிம்” விண்கலத்தை H2A ராக்கெட் மூலம் ஏவ திட்டமிட்டிருந்தது. ஆனால், இந்த விண்கலம் ஏவுதல் திடீரென நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. இதுகுறித்து ஜப்பான் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் கூறுகையில், “சந்திரனில் உள்ள பாறைகளை ஆராய்ச்சி செய்வது மற்றும் துல்லியமாக தரையிறங்கும் நடைமுறைகளைக் கண்டுபிடிக்கத் திட்டமிட்டுள்ளோம். இந்த ஆய்வு வெற்றியடைந்தால், ஜப்பான் நிலவில் விண்கலத்தை வெற்றிகரமாகத் தரையிறக்கிய ஐந்தாவது நாடாகும்.
இந்த விண்கலத்தில் இருந்து கிடைக்கும் தரவுகள் அடிப்படையில் அமெரிக்காவுடன் இணைத்து, நிலவுக்கு வீரர்களை அனுப்புவதை நோக்கமாகக் கொண்டுள்ளோம். கடந்த மார்ச் மாதம் H2 என்ற ஜப்பான் விண்வெளி ஆய்வு நிறுவன இராக்கெட் தோல்வியுற்றது. அதிலிருந்த குறைபாடுகளைக் களைந்து தற்போது H2A இராக்கெட் தயார்படுத்தி உள்ளோம். இந்த புதிய H2A இராக்கெட் திங்கட்கிழமை காலை விண்ணில் ஏவப்பட்ட இருந்தது. சாதகமற்ற வானிலை காரணமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளனர்.