சந்திரபாபு நாயுடு கைது: தெலுங்கு தேசம் கட்சியினர் மறியல்!
Jul 23, 2025, 11:40 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சந்திரபாபு நாயுடு கைது: தெலுங்கு தேசம் கட்சியினர் மறியல்!

வன்முறையில் ஈடுபட்டதால் 144 தடை உத்தரவு பிறப்பிப்பு!

Web Desk by Web Desk
Sep 11, 2023, 03:42 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஆந்திர மாநில முன்னாள் முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அம்மாநிலத்தில் போராட்டம் வெடித்திருக்கிறது. மறியலில் ஈடுபட்ட தெலுங்கு தேசம் கட்சியினர், வாகனங்கள் மீது கல்வீசித் தாக்குதல் நடத்தியதோடு, டயர்களையும் தீவைத்து கொளுத்தியதால், மாநிலத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது.

ஆந்திர மாநிலத்தின் முன்னாள் முதல்வரான சந்திரபாபு நாயுடு, தெலுங்கு தேசம் கட்சியின் தலைவராகவும் இருந்து வருகிறார். இந்த சூழலில், கடந்த ஆட்சியில் திறன் மேம்பாட்டுக் கழகத்தில் ஊழல் செய்ததாக சந்திரபாபு நாயுடுவை சி.ஐ.டி. காவல்துறையினர் கைது செய்தனர். தொடர்ந்து, விஜயவாடாவில் உள்ள ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவரை வரும் 22-ம் தேதி வரை காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.  இதையடுத்து, சந்திரபாபு நாயுடுவை ராஜமகேந்திரபவரத்தில் உள்ள சிறையில் நள்ளிரவு அடைத்தனர்.

இந்த நிலையில், சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, இன்று மாநிலம் தழுவிய பந்த்துக்கு தெலுங்கு தேசம் கட்சி அழைப்பு விடுத்திருந்தது. இந்த பந்த்துக்கு ஜனசேனா, இந்திய கம்யூனிஸ்டு மற்றும் லோக் சத்தா ஆகிய கட்சிகளும் ஆதரவு தெரிவித்தன. பந்த் அறிவிக்கப்பட்டதால் ஆந்திரா முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மேலும், தெலுங்கு தேசம் கட்சியின் முக்கியத் தலைவர்கள் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டனர். இதனால், மாநிலம் முழுவதும் பதற்றமான சூழ்நிலை நிலவவே, ஏராளமான காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.

எனினும், தடையை மீறி தெலுங்கு தேசம் உள்ளிட்ட கட்சியினர் சாலைமறியலில் ஈடுபட்டனர். மேலும், வாகனங்கள் மீதும் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். இதில், பல வாகனங்களின் கண்ணாடிகள் உடைந்து நொறுங்கியது. வாகனங்களின் ஓட்டுனர்கள் சிலரும் காயமடைந்தனர். இது தவிர, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வாகனங்களையும், வாகனங்களின் டயர்களையும் சாலையில் போட்டு தீவைத்துக் கொளுத்தினர். இதையடுத்து, தெலுங்கு தேசம் கட்சி தொண்டர்களை காவல்துறையினர் கைது செய்து திருமண மண்டபங்களில் அடைத்து வைத்தனர்.

விஜயவாடா, கர்னூல், கடப்பா உள்ளிட்ட முக்கிய நகரங்களில் அதிக பதற்றம் நிலவுவதால் காவல்துறையினர் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த பந்த் காரணமாக ஆந்திராவுக்குச் செல்லும் சரக்கு வாகனங்கள், தமிழக எல்லையில் உள்ள சோதனை சாவடிகள் ஓரமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. அதேசமயம், திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். பந்த்தால் பக்தர்கள் அவதிப்படக் கூடாது என்பதற்காக திருப்பதிக்கு மட்டும் பந்த் இல்லை என்று விலக்கு அளித்துள்ளனர்.

Tags: Arrestprotestchandrababu naiduAndra Pradeshtelungu desam party
ShareTweetSendShare
Previous Post

பலியாகும் புலிகள் – நீலகிரியில் தொடரும் சோகம்!

Next Post

13 மொழிகளில் பொறியியல் பாடத் திட்டம்- ஏஐசிடிஇ தலைவர் சீத்தாராம் பேச்சு!

Related News

சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு – தனிப்படைக்கு பழுதடைந்த வாகனம் வழங்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு!

Waddels சாலைக்கு எஸ்றா சற்குணம்  பெயரா? – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

தீப்பிடித்து எரிந்த அரசுப்பேருந்து – உளுந்தூர்பேட்டை பணிமனையில் பரபரப்பு!

இன்றைய தங்கம் விலை!

புதுச்சேரியில் சுற்றுலா படகு இயக்க லைசென்ஸ் பெற்றுத்தர லஞ்சம் வாங்கும் சுற்றுலாத்துறை அதிகாரி – வைரல் வீடியோ!

அசுத்தமாக குடிநீர் வருவதாக முறையிட்ட மக்கள் – தண்ணீர் பாட்டிலை பிடுங்கி எறிந்த திமுக எம்எல்ஏ!

Load More

அண்மைச் செய்திகள்

கடலூரில் சட்ட விரோத கருக்கலைப்பு தொடர்பாக 6 பேர் கைது!

மதுரை மாநகராட்சி சொத்துவரி முறைகேடு – விசாரணை குழுத் தலைவராக டிஐஜி அபினவ் குமார் நியமனம்!

4 நாள் அரசுமுறைப் பயணம் – பிரிட்டன், மலாத்தீவு நாடுகளுக்கு செல்கிறார் பிரதமர் மோடி!

சாலை வசதி இல்லாததால் உயிரிழந்தவரின் உடலை தொட்டில் கட்டி தூக்கி செல்லும் அவலம் – அண்ணாமலை கண்டனம்!

50 மாத கால ஆட்சியில் விவசாயிகளுக்கு திமுக அரசு செய்தது என்ன? இபிஎஸ் கேள்வி!

இடமாற்றத்தில் மகிழ்ச்சி இல்லை, நல்ல நினைவுகளுடன் செல்கிறேன் – நீதிபதி விவேக் குமார் சிங்

சிறுவன் கடத்தல் வழக்கு – விசாரணை முறையாக நடைபெறவில்லை என்றால் சிபிஐக்கு மாற்ற நேரிடும் என உயர் நீதிமன்றம் எச்சரிக்கை!

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு – அப்ரூவராக மாறுவதாக முன்னாள் காவல் ஆய்வாளர் மனுத்தாக்கல்!

மழை காரணமாக தக்காளி விளைச்சல் பாதிப்பு – விலை உயர்வு!

ஆய்வுக்கு உரிய ஒத்துழைப்பு வழங்காத பட்டாசு ஆலைகளை தற்காலிகமாக மூடலாம் – தென்மண்டல பசுமை தீர்ப்பாயம்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies