13 மொழிகளில் பொறியியல் பாடத் திட்டம்- ஏஐசிடிஇ தலைவர் சீத்தாராம் பேச்சு!
Aug 26, 2026, 12:16 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

13 மொழிகளில் பொறியியல் பாடத் திட்டம்- ஏஐசிடிஇ தலைவர் சீத்தாராம் பேச்சு!

Sivasubramanian P by Sivasubramanian P
Sep 11, 2023, 03:44 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

நமது நாட்டில், தமிழ், கன்னடம், மலையாளம் மற்றும் மராட்டியம் உள்ளிட்ட 13 மொழிகளில் பொறியியல் மற்றும் டிப்ளமோ பாடத்திட்டங்கள் உருவாகப்பட்டுள்ளன. அவைகள் அனைத்தும் இணையத்தில் இலவசமாகக் கிடைக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என அகில இந்தியத் தொழில்நுட்ப கல்வி குழு தலைவர் சீத்தாராம் தெரிவித்துள்ளார்.

தஞ்சாவூரில் உள்ள சாஸ்திரா நிகர் நிலை பல்கலைக்கழகத்தில் 47 -வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில், பங்கேற்ற அகில இந்திய தொழில்நுட்ப கல்வி குழு தலைவர் சீத்தாராம் பேசுகையில், அகில இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் குழு கட்டுப்பாட்டில் 3,600-க்கும் அதிகமான பொறியியல் கல்லூரியில் செயல்பட்டு வருகின்றன.

இதில், 13 லட்சத்துக்கும் மேற்பட்ட இருக்கைகள் உள்ளன. இந்த கல்லூரிகள் மூலம் ஒவ்வொரு ஆண்டும் 10 லட்சம் அதிகமான பொறியாளர்கள் உருவாக்கப்பட்டு வருகின்றனர். அத்துடன் 3,400 டிப்ளமோ கல்லூரிகள் வாயிலாக 10 லட்சம் பட்டயதாரிகள் உருவாக்கப்பட்டு வருகின்றனர்.

உலகம் முழுக்க அதிக அளவில் பட்டதாரிகளை உருவாக்கிய நாடாகவும், பல்வேறு உலக நாடுகளுக்கு இஞ்ஜினியர்களை அனுப்பிவைக்கும் நாடாகவும் இந்தியா திகழ்ந்து வருகிறது. இதில், 40 சதவீதம் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

நாடு முழுவதும் உள்ள பல்வேறு பொறியியல் கல்வி நிறுவனங்களில் 110 மொபைல் செயலிகள் உருவாக்கப்பட்டுள்ளது. இது ஒரு வரலாற்று சாதனையாகும். மேலும், இந்த ஆண்டு மேலும் 100 மொபைல் செயலிகள் உருவாக்கத் திட்டமிட்டுள்ளோம்.

ஐரோப்பா போன்ற நாடுகளில் பொறியியல் படிப்புகள் அவர்களது தாய் மொழியில் வழங்குகின்றனர். நாமும் நமது நாட்டில், தமிழ், கன்னடம், மலையாளம் மற்றும் மராட்டியம் உள்ளிட்ட 13 மொழிகளில் பொறியியல் மற்றும் டிப்ளமோ பாடத்திட்டங்கள் உருவாகப்பட்டுள்ளன. அவைகள் அனைத்தும் இணையத்தில் இலவசமாகக் கிடைக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பல்வேறு நிபுணர்களைக் கலந்த ஆலோசித்து இந்த பாடத்திட்டங்கள் உருவாக்கியுள்ளோம்.

இவ்வாறு உருவாக்கப்பட்ட பாடத்திட்டங்களை 17 நாடுகளிலிருந்து 5 லட்சம் பேர் பதிவிறக்கம் செய்துள்ளனர் என்றார்.

Tags:
Share
Tweet
SendShare
Previous Post

சந்திரபாபு நாயுடு கைது: தெலுங்கு தேசம் கட்சியினர் மறியல்!

Next Post

நடிகர் சங்கத்திற்கு ரூ.40 கோடியில் புதிய கட்டிடம் – விஷால் தகவல்!

Related News

கோவில்பட்டி கடலை மிட்டாய் விலை 25% உயர்வு; உற்பத்தியாளர்கள் அறிவிப்பு

தெருநாய்களை கருணைக் கொலை செய்யலாம்; கேரளா அரசு அனுமதி

மேகமலையில் அரசு ஊழியர்களை வெளியேற்றும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு

ரூ.50,000 அபராதம் விதிக்கப்படும்; முதலமைச்சர் விஜய்க்கு உயர்நீதிமன்றம் எச்சரிக்கை

ஆசிரியர் தகுதித் தேர்வு தொடர்பான தீர்மானம் ஒரு மனதாக நிறைவேற்றம்

முதல் தலைமுறை மாணவர்களுக்கு முழு கல்வி கட்டண விலக்கு; தமிழக அரசு அறிவிப்பு

Load More

அண்மைச் செய்திகள்

ஒரு கழுதையின் விலை ரூ.3 லட்சம் : சீனாவிற்கு ஏற்றுமதியாகும் பாகிஸ்தான் கழுதைகள் – சிறப்பு தொகுப்பு!

டெல்லியில் நாளை கூடுகிறது காவிரி நீர் மேலாண்மை ஆணையம் – நீர் திறப்பு குறித்து ஆலோசனை!

பால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும் – பேரவையில் இபிஎஸ் வலியுறுத்தல்!

பரந்தூர் விமான நிலைய விவகாரம் குறித்து பேச அனுமதி மறுப்பு – திமுக வெளிநடப்பு!

பத்மஸ்ரீ விருது பெற்ற தாமோதரனின் சுயசரிதை நூல் – ராம்நாத் கோவிந்த் வெளியிட்டார்!

பரந்தூர் விமான நிலைய திட்டம் கைவிடப்படுகிறது – பேரவையில் முதல்வர் விஜய் அறிவிப்பு!

பொங்கல் பண்டிகை முதல் ஆண்டுக்கு 3 விலையில்லா எரிவாயு சிலிண்டர் – முதல்வர் விஜய் அறிவிப்பு!

அக்டோபர் 2 முதல் மகளிருக்கான கட்டணமில்லா பயணத் திட்டம் விரிவுபடுத்தப்படும் – பேரவையில் முதல்வர் விஜய் அறிவிப்பு!

ஹோர்முஸ் ஜலசந்தி வழியாக ஒரு சொட்டு கச்சா எண்ணெய்கூட செல்ல அனுமதிக்க மாட்டோம் – ஈரான் எச்சரிக்கை!

எரிவாயு தட்டுப்பாடு : வங்கதேசத்தில் தொழிற்சாலைகள் மூடல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies