முதுமை மற்றும் ஞாபக மறதி (டிமென்ஷியா) நோயால் பாதிக்கப்பட்ட 92 வயது தந்தையை மனைவியை பிரித்து மகன் தனியாக அழைத்து செல்ல கேரள உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
92 வயதான முதியவரான தந்தையை கேரளா மாநிலம் நெய்யாற்றின்கராவில் உள்ள அவரது குடும்ப வீட்டிற்கு அழைத்துச் சென்று, அங்கு அவர் மனைவியுடன் வசிக்கலாம் என, பராமரிப்பு மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தின் உத்தரவை எதிர்த்து, தம்பதியின் மகன் தாக்கல் செய்த ரிட் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
மகன் தரப்பில் டிமென்ஷியா மற்றும் பிற நோய்களால் பாதிக்கப்பட்ட தனது தந்தையை, வயது முதிர்ந்த தாயால் கவனித்துக் கொள்ள முடியாது என்று வாதிட்டப்பட்டது.
தங்கள் வீட்டில் இருக்கும்போது அவர் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தார்” என்றும், ஆனால் மகன் வீட்டில் “ஏழை” போல் அவர் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் மனைவி தரப்பில் வாதம் எடுத்து வைக்கப்பட்டது.
மனுதாரர் மற்றும் பிரதிவாதிகளை விசாரித்த நீதிபதி, தீர்ப்பை வழங்குவதற்கு முன் மாவட்ட சமூக நீதி அதிகாரி மற்றும் மாநில காவல்துறை தலைமை இயக்குநரால் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கைகளை ஆய்வு செய்தார்.பின்னர் 92 வயதான கணவரை மனைவியுடன் குடும்ப வீட்டில் சேர்ந்து வாழ அனுமதி அளித்து தீர்ப்பளித்ததார்.