காசா மீதான தாக்குதல் தொடரும் என இஸ்ரேல் அறிவித்துள்ளது.
பாலஸ்தீன ஆதரவு பெற்ற காஸாவின் ஹமாஸ் படையினருக்கும் இஸ்ரேல் ராணுவத்துக்கும் மூன்று வாரங்களுக்கும் மேலாக போர் நீடித்து வருகிறது.
இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பினர் திடீர் தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து, அக்டோபர் 7ஆம் தேதி காஸா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இரண்டாவது கட்டமாக காஸாவுக்குள் புகுந்து தரைவழித் தாக்குதல் நடத்தி வருகிறது.
இதனிடையே, காசாவில் அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் விமானப்படை தாக்குதல் நடத்தியதாகவும், அதில் 50 பாலஸ்தீனர்கள் உயிரிழந்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. ஆனால் 195 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதாகவும், 777 பேர் காயமடைந்துள்ளதாகவும், 120-க்கும் அதிகமானோர் இடிபாடுகளில் சிக்கி இருப்பதாகவும் ஹமாஸ் அமைப்பு தெரிவித்துள்ளது.
அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் அதிக எண்ணிக்கையிலான பொதுமக்கள் உயிரிழந்ததையும், அங்கு ஏற்பட்டுள்ள அழிவின் அளவையும் கருத்தில் கொண்டு, இவை போர்க்குற்றங்களுக்கு சமமான தாக்குதல் என கருதுவதாக ஐ.நா. மனித உரிமை அமைப்பு தெரிவித்துள்ளது.
மனிதாபிமான அடிப்படையில் போரை நிறுத்த வேண்டும் என வலியுறுத்தி ஐ.நா. சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆனால் அதனை இஸ்ரேல் திட்டவட்டமாக நிராகரித்துள்ளது. மேலும்ட ஹமாஸ் அமைப்பின் முக்கிய தளபதி இப்ராஹிம் பியாரி தங்கள் வான்வழி தாக்குதலில் உயிரிழந்ததாகவும் தெரிவித்துள்ளது.