உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இருந்து கணுக்கால் காயம் காரணமாக ஹர்திக் பாண்டியா விலகியுள்ளார். அவருக்கு பதிலாக பிரசித் கிருஷ்ணா அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
ஒரு நாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா சிறப்பாக விளையாடி அரையிறுதிக்குள் முதல் அணியாக நுழைந்துள்ளது.
இந்நிலையில் அக்டோபர் 19 ஆம் தேதி நடைபெற்ற இந்தியா வங்கதேசம் இடையேயான போட்டியில் இந்திய அணியின் வீரர் ஹர்திக் பாண்டியாவுக்கு கணுக்காலில் காயம் ஏற்பட்டது.
ஆதலால் போட்டியில் பங்கேற்க முடியாமல் பெங்களுருவில் சிகிச்சை பெற்று வந்தார் ஹர்திக் பாண்டியா. இந்நிலையில் தற்போது அவருக்கு காயம் முழுவதுமாக குணமடையாததால் உலகக்கோப்பையில் இருந்து விலகியுள்ளார் என்று அதிகாரபூர்வமான தகவல் வெளியாகியுள்ளது.
உள்நாட்டில் உலகக் கோப்பையை வெல்வதே தன்னுடைய லட்சியம் என்றும், அதற்காகவே கடுமையாக உழைத்து மீண்டு வந்ததாகவும் ஹர்திக் பாண்டியா கூறியிருந்தார். தற்பொழுது அவர் உலக கோப்பைத் தொடரில் விளையாட முடியாமல் போனது அவரது இரசிகர்களை ஏமாற்றம் அடையச் செய்துள்ளது.
மேலும் இந்தத் தொடரில் அவருக்கு பதிலாக வேகப்பந்து வீச்சாளர் பிரசித் கிருஷ்ணா இந்திய அணியின் சேர்க்கப்பட்டுள்ளார். ஹர்திக் பாண்டியாவுக்கு பதில் பிரசித் கிருஷ்ணா அணியில் இணைந்தாலும் பிளே லெவனிலில் இடம் கிடைப்பது சந்தேகமே.