இந்துக்களின் முக்கிய பண்டியான தீபாவளி, இந்தியா மட்டுமல்லாது அமெரிக்கா, இங்கிலாந்து, சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட வெளிநாடுகளிலும் உற்சாகத்துடன் கொண்டாடப்படுகிறது.
குறிப்பாக, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் தனது அதிகாரப்பூர்வ இல்லத்தில் தீபாவளி பண்டிகையைக் கொண்டாடி மகிழ்ந்தார்.
இந்த விழாவில், அமெரிக்க வாழ் இந்தியர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். அப்போது, விருந்தினர்கள் மத்தியில் பேசிய கமலா ஹாரிஸ், ஹமாஸ் – இஸ்ரேல் போர் வேதனை தருகிறது என்றும், இந்த போர் விரைவில் முடிவுக்கு வரவேண்டும் என இறைவனிடம் வேண்டுவதாக குறிப்பிட்டவர், இந்த முக்கியமான தருணத்தில் ஒளியின் திருவிழாவான தீபாவளியைக் கொண்டாடுவது மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது என்றார்.
இதுபோல, இங்கிலாந்திலும் தீபாவளி பண்டிகை மிகுந்த மகிழ்ச்சியுடன் கொண்டாடப்பட்டது. இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக், மனைவி அக்ஷரா மூர்த்தியுடன் டவுனிங் தெருவில் உள்ள இல்லத்தில், புத்தாடை அணிந்து தீபாவளி பண்டிகையைக் கொண்டாடினார். இங்கிலாந்தில் உள்ள இந்துக்கள் கொண்டாட்டத்தில் பங்கேற்று மகிழ்ந்தனர்.