சென்னையை மீட்டெடுக்க, சென்னையில் வெள்ள மேலாண்மை என்ற புதிய திட்டத்திற்கு ஒப்புதல் அளித்து ரூ.561.29 கோடியை ஒதுக்கியும், மொத்தம் ரூ.1,000 கோடியை தமிழக மக்கள் நலனுக்காக வழங்கிய பாரத பிரதமர் நரேந்திர மோடிக்கு, பாஜக தேசிய மகளிர் அணித் தலைவரும், கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதி உறுப்பினருமான வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக, பாஜக தேசிய மகளிர் அணித் தலைவரும், கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதி உறுப்பினருமான வானதி சீனிவாசன் தமது X பதிவில்,
தமிழக மக்கள் நலனில் பாரத பிரதமர் நரேந்திர மோடி மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட தமிழகத்திற்கு, மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து முதற்கட்டமாக ரூபாய் 450 கோடி நிவாரண நிதியும் ஆண்டு தோறும் மழைக்காலத்தில் சிக்கி தவிக்கும் சென்னையை மீட்டெடுக்க சென்னையில் வெள்ள மேலாண்மை என்ற புதிய திட்டத்திற்கு ஒப்புதல் அளித்து ரூ.561.29 கோடியை ஒதுக்கியும், மொத்தம் ரூ.1000 கோடியை தமிழக மக்கள் நலனுக்காக வழங்கிய பாரத பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்களுக்கும், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அவர்களுக்கும் தமிழக மக்கள் சார்பாக நன்றிகள் என குறிப்பிட்டுள்ளார்.