சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மத்திய இணை அமைச்சர் ராஜிவ் சந்திரசேகர் இன்று ஆய்வு செய்கிறார்.
மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையில் கொட்டி தீர்த்த மழையால் பல பகுதிகள் வெள்ளக்காடானது. இந்நிலையில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் நேற்று ஆய்வு செய்தார்.
தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு வழங்கும் என்றும் அவர் உறுதியளித்தார். மேலும் நிவாரண பணிகளுக்காக மத்திய அரசு ரூ. 450 கோடி வரை விடுவித்துள்ளது.
இந்நிலையில் மத்திய இணை அமைச்சர் ராஜிவ் சந்திரசேகர் பாதிக்ககப்பட்ட பகுதிகளை இன்று பார்வையிடுகிறார்.மேற்கு மாம்பலம் திருவல்லிக்கேணி, முடிச்சூர், வரதாரஜபுரம், பகுதிகளில் அவர் நேரில் ஆய்வு செய்கிறார். அவருடன் தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலையும் வெள்ளம் பாதித்த பகுதிகளுக்கு சென்று நிவாரணம் வழங்குகிறார்.