கறுப்புப் பணத்தைக் குவிப்பதில் காங்கிரஸ் மும்முரமாக இருக்கும்போது, பிரதமர் மோடி ஒவ்வொரு பைசாவையும் அதிக நன்மைக்காகச் செலவிடுகிறார் என்று மத்திய தகவல் தொடர்புத் துறை அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸின் ஊழல் விவகாரம் தொடர்பாக தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர் காங்கிரசை கடுமையாக சாடினார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அனுராக் தாக்கூர்,
காங்கிரஸ் கறுப்புப் பணத்தைக் குவிப்பதில் மும்முரமாக இருக்கும்போது, பிரதமர் நரேந்திர மோடி ஒவ்வொரு பைசாவையும் அதிக நன்மைக்காக செலவிடுகிறார்.
அமலாக்க இயக்குனரகம் தனது சோதனையின் போது காங்கிரஸ் எம்பி தீரஜ் சாஹுவின் வீட்டில் 200 கோடி ரூபாய் ரொக்கத்தை கண்டுபிடித்ததை அடுத்து, காங்கிரஸ் எம்.பி.யிடம் இருந்து இவ்வளவு பெரிய தொகையை மீட்டது கவலை அளிப்பதாக கூறினார்.
இந்த விவகாரத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும், ராகுல் காந்தியும் வாய் திறக்காமல் இருப்பது ஏன் என்று கேள்வி எழுப்பினார். புலனாய்வு அமைப்புகள் சுதந்திரமாக செயல்பட்டு கருப்பு பணம் மீட்கப்படும் என்று கூறினார்.