சமூக நீதியை செயலில் காட்டுங்கள் - திமுகவுக்கு வானதி சீனிவாசன் பதிலடி!
Sep 4, 2025, 05:14 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சமூக நீதியை செயலில் காட்டுங்கள் – திமுகவுக்கு வானதி சீனிவாசன் பதிலடி!

Web Desk by Web Desk
Dec 16, 2023, 12:59 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பாஜகவைப் பின்பற்றி தமிழ்நாட்டில் பட்டியலினத்தை சேர்ந்தவரையும், பெண் ஒருவரையும் துணை முதலமைச்சராக்க வேண்டும் என பாஜக தேசிய தலைவரும், கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக, அவர்  வெளியிட்டுள்ள அறிக்கையில், சமீபத்தில் நடந்த ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல்களில் ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், சத்தீஸ்கரில் பாஜக அமோக வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளது. சத்தீஸ்கரில் பழங்குடியினத்தைச் சேர்ந்த விஷ்ணு தியோ சாய், மத்தியப்பிரதேசத்தில் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த மோகன் யாதவ் ஆகியோர் முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

ராஜஸ்தானில் பட்டியலினத்தைச் சேர்ந்த பிரேம்சந்த் பைரவா, மத்தியப்பிரதேசத்தில் பட்டியலினத்தைச் சேர்ந்த ஜெகதீஷ் தேவ்தா ஆகியோர் துணை முதலமைச்சர்களாக தேர்வாகியுள்ளனர். ஒடுக்கப்பட்ட மக்கள் அவர்களுக்கு தேவையானதை அவர்களை செய்து கொள்ள அரசியல் அதிகாரம் வழங்குவதுதான் உண்மையான சமூக நீதி. அதைத்தான் பாஜக செய்திருக்கிறது.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையில் 12 பட்டியலினத்தவர், 8 பழங்குடியினர், 27 பிற்படுத்தப்பட்டோர், 11 பெண்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. 76 ஆண்டுகால சுதந்திர வரலாற்றில் ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, மற்றும் பெண்கள் அதிக எண்ணிக்கையில் இருக்கும் மத்திய அமைச்சரவை இதுதான்.

இது மட்டுமல்ல, நமது அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கிய டாக்டர் அம்பேத்கர் அவர்களுக்குப் பிறகு, பட்டியலினத்தைச் சேர்ந்த அர்ஜுன்ராம் மேக்வாலை, மத்திய சட்ட அமைச்சராக்கியிருக்கிறார் பிரதமர் மோடி. இதுதான் சமூக நீதி அரசு.

ஆனால், சமூக நீதி, சம நீதி, சமத்துவம், ஜனநாயகம், பெண்ணுரிமை பேசும் திமுக அமைச்சரவையில், பட்டியலினத்தைச் சேர்ந்தவர்களுக்கு எந்த முக்கிய துறைகளும் இல்லை. 35 பேர் கொண்ட அமைச்சரவையில் இருவர் மட்டுமே பெண்கள். வாரிசு அரசியல், ஊழலில் திளைக்கும் திமுகவுக்கு இனி சமூக நீதி பற்றி பேச எந்த உரிமையும் இல்லை. அமைச்சராக உள்ள மகன் உதயநிதியை, துணை முதலமைச்சராக்க, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டமிட்டுள்ளதாக அவ்வப்போது ஊடகங்களில் செய்திகள் வருகின்றன.

பாஜகவைப் பின்பற்றி தமிழ்நாட்டில் பட்டியலினத்தைச் சேர்ந்த ஒருவரையும், பெண் ஒருவரையும் துணை முதலமைச்சராக்க வேண்டும். அவர்களுக்கு உள்துறை, நிதி, பொதுப்பணி, வருவாய், தொழில், உயர் கல்வி, பள்ளிக் கல்வி, சுகாதாரம் போன்ற முக்கியத் துறைகளை ஒதுக்க வேண்டும். இனியாவது வாய்ச் சொல்லில் வீரம் காட்டாமல், சமூக நீதியை செயலில் காட்டுங்கள் என குறிப்பிட்டுள்ளார்.

Tags: Scheduled Castemodi governmentdebuty chief ministerstamilnadubjpDMKVanathi Srinivasan
ShareTweetSendShare
Previous Post

விண்ணப்பித்த எத்தனை நாட்களில் பாஸ்போர்ட் கிடைக்கும்?

Next Post

விஜய் திவாஸ் : போர் நினைவிடத்தில் அமைச்சர் ராஜ்நாத் சிங் மரியாதை!

Related News

“மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம்” – அமைதியா? போரா? – சீன அதிபரின் சவால்!

எந்தெந்த பொருட்கள், சேவைக்கு வரி விலக்கு?

மேற்குலக நாடுகளே இருக்காது : அமெரிக்கா, ஐரோப்பாவுக்கு எலான் மஸ்க் எச்சரிக்கை!

கிருஷ்ணகிரி : புயலால் சேதமடைந்த சாலையை சீரமைக்க கோரிக்கை!

ஆனந்த் மகேந்திராவின் கருத்துக்கு பதில் கருத்து தெரிவித்த இணையவாசிகள்!

லண்டன் : விபத்துக்குள்ளான இரண்டு அடுக்கு பேருந்து – பலர் காயம்!

Load More

அண்மைச் செய்திகள்

ஜிஎஸ்டி சீர் திருத்தம் உள்நாட்டு உற்பத்தியில் முதலீட்டை ஊக்குவிக்கும் : Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு

கடலூர் : மழைநீர் வடிகால் அமைத்ததாக கூறி ரூ.13 லட்சம் மோசடி!

சென்னை உயர்நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் – மோப்ப நாய்கள் உதவியுடன் சோதனை!

ஜப்பானில் விண்வெளி வீரர் என கூறி மூதாட்டியை ஏமாற்றிய இளைஞர்!

ஜம்மு-காஷ்மீர் : வெள்ள பாதிப்பு குறித்து ட்ரோனில் ஆய்வு செய்த ராணுவம்!

கொடிய நோயால் அவதிப்படுகிறாரா ட்ரம்ப்? : ISCHEMIC STROKE குறித்து அலசி ஆராயும் அமெரிக்கர்கள்!

திருச்சி : தலையை துண்டித்து இளைஞர் படுகொலை!

50-க்கும் மேற்பட்ட தெரு நாய்களை வீட்டில் அடைத்துவிட்டு சென்ற வாடகைதாரர்!

பனியன் குடோனில் தீ விபத்து – தீயை போராடி அணைத்த வீரர்கள்!

அமெரிக்க மிரட்டலை மதிக்காத இந்தியா!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies