வாரணாசி-புது டெல்லி வந்தே பாரத் ரயிலை பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இரண்டு நாள் பயணமாக தனது மக்களவைத் தொகுதியான வாரணாசிக்கு சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, பல திட்டங்களைத் தொடங்கி வைத்தார். அதன் ஒரு பகுதியாக வாரணாசி மற்றும் டெல்லி இடையே இரண்டாவது வந்தே பாரத் ரயிலை பிரதமர் நரேந்திர மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
லாஜிஸ்டிக்ஸ் துறையை மேம்படுத்தும் வகையில், சரக்கு வழித்தடத்தின் (DFC) புதிய தீன் தயாள் உபாத்யாய் சந்திப்பு முதல் புதிய பவுபூர் சந்திப்பு வரையிலான பகுதியையும் அவர் தொடங்கி வைத்தார்.
இதனைத்தொடர்ந்து ஸ்வர்வேட் மகாமந்திர் திறப்பு விழாவில் பிரதமர் உரையாற்றினார். அப்போது, எனது முதல் வேண்டுகோள், ஒவ்வொரு சொட்டு நீரையும் சேமித்து மக்களுக்கு நீர் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.
கிராமம் கிராமமாக சென்று டிஜிட்டல் பரிவர்த்தனைகள் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துங்கள், ஆன்லைன் மூலம் பணம் செலுத்துவது பற்றி அவர்களுக்குக் கற்றுக் கொடுங்கள் என கேட்டுக்கொண்டார்.
உள்ளூர், உள்ளூர் தயாரிப்புகளை முடிந்தவரை விளம்பரப்படுத்தவும், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட தயாரிப்புகளுக்கு முன்னுரிமை கொடுங்கள் என பிரதமர் கேட்டுக்கொண்டார்.முடிந்தவரை, முதலில் உங்கள் சொந்த நாட்டைப் பாருங்கள், உங்கள் சொந்த நாட்டை சுற்றிப்பாருங்கள், நீங்கள் வேறு நாட்டிற்கு செல்ல விரும்பினால், முழு நாட்டையும் பார்க்கும் வரை வெளிநாடு செல்ல வேண்டும் என்ற எண்ணம் வரக்கூடாது என கூறினார்.
இன்றைய நாட்களில், பெரிய பணக்காரர்களிடம் கூட, அவர்கள் ஏன் வெளிநாடுகளில் திருமணம் செய்து கொள்கிறார்கள் என்று நான் கேட்டுக்கொண்டே இருக்கிறேன், அதனால் இந்தியாவில் திருமணம் செய்துகொள் என்று சொன்னேன்,” என்று மோடி கூறினார்.இயற்கை விவசாயம் குறித்து விவசாயிகளுக்கு மேலும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்
கடந்த முறையும் இந்த கோரிக்கையை உங்களிடம் வைத்தேன், இப்போது மீண்டும் சொல்கிறேன். இது பூமி தாயைக் காப்பாற்றுவதற்கான மிக முக்கியமான பிரச்சாரம். தினையை உங்களின் அன்றாட உண்ணும் வாழ்வில் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள், அதைப் பரவலாக விளம்பரப்படுத்துங்கள், இது ஒரு சூப்பர் உணவு என பிரதமர் மோடி கூறினார்.
எனது அடுத்த வேண்டுகோள்: அது உடற்தகுதி, யோகா அல்லது விளையாட்டாக இருந்தாலும், அதை உங்கள் வாழ்க்கையின் ஒரு அங்கமாக ஆக்குங்கள். மேலும் ஒன்பதாவது கோரிக்கை: குறைந்தபட்சம் ஒரு ஏழை குடும்பத்திற்கு ஆதரவாக இருங்கள், அவர்களுக்கு உதவுங்கள். இந்தியாவில் வறுமையை அகற்ற இது அவசியம். என்று பிரதமர் கூறினார்.