அயோத்தி இராமர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு தமிழகத்தில் அழைப்பிதழ் கொடுக்கும் பணியை ஆர்எஸ்எஸ் தொடங்கியுள்ளது.
அயோத்தி இராமர் கோவில் கும்பாபிஷேகம் 2024ஆம் ஆண்டு ஜனவரி 22ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. இந்த விழவில் பிரதமர் நரேந்திர மோடி, ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்,உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர். அவர்களுக்கு முறைப்படி அழைப்பிதழ் வழங்கப்பட்டுள்ளது.
அதேபோல் பாஜக மூத்த தலைவர்கள் எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி உள்ளிட்ட முக்கிய தலைவர்களுக்கு நேரில் சென்று அழைப்பிதழ் அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அயோத்தி இராமர் கோவில் கும்பாபிஷேகத்திற்காக அழைப்பிதழ் வழங்கும் பணியை ஆர்எஸ்எஸ் அமைப்பினர் தமிழகத்தில் தொடங்கியுள்ளனர். சென்னை கோபாலபுரம் வேணுகோபாலசாமி சன்னதியில் அழைப்பிதழ் வைத்து பூஜை செய்யப்பட்டது. இதனைத்தொடர்ந்து முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி இல்லத்தில் ஆர்எஸ்எஸ் நிர்வாகிகள் அழைப்பிதழ் வழங்கினர்.
அதேபோல், தினமலர் வெளியீட்டாளர் ஶ்ரீ இலட்சுமிபதிக்கு ஆர்எஸ்எஸ் சார்பில் இராமர் கோவில் கும்பாபிஷேகத்திற்கான அழைப்பிதழை ஆர்.எஸ். எஸ் நிர்வாகிகள் ஶ்ரீனிவாஸன், மங்களமுருகன், மகேஷ் ஆகியோர் வழங்கினர்.