அயோத்தி ஸ்ரீராமர் கோவில் கும்பாபிஷேகம் - வேகம் எடுக்கும் அழைப்பிதழ் பணி!
Oct 24, 2025, 10:39 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அயோத்தி ஸ்ரீராமர் கோவில் கும்பாபிஷேகம் – வேகம் எடுக்கும் அழைப்பிதழ் பணி!

Web Desk by Web Desk
Jan 1, 2024, 04:25 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பாரதத்தின் ஆன்மீக கலாச்சாரத்தின் அடையாளமாக விளங்கவிருக்கும்  அயோத்தி ஶ்ரீராமர் கோவில் கும்பாபிஷேக விழா, வரும் ஜனவரி 22 அன்று நடைபெற உள்ளது.

கடந்த 2020 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், பாரதப்  பிரதமர் மோடி அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்த கோவில் திருப்பணிகள் நிறைவடைந்து, வரும் 22 -ம் தேதி அன்று பிரதமர் மோடியின் திருக்கரங்களால் திறந்து வைக்கப்பட  உள்ளது.

இந்த நிலையில், பகவான் ஶ்ரீராமர் கோவில் கும்பாபிஷேகம், பாரதத்தின் ஒட்டுமொத்த மக்களுக்கும் மற்றுமொரு தீபாவளிப் பண்டிகையாக இருக்கும் வகையில், அன்றைய தினம் நாட்டு மக்கள் அனைவர் இல்லங்களிலும் தீபங்கள் ஏற்றிக் கொண்டாட வேண்டும் என பிரதமர் மோடி கேட்டுக்கொண்டுள்ளார்.

அந்த வகையில், பிரதமர் அறிவுரையின்படி, கும்பாபிஷேகப் பெருவிழாவில், நாடு முழுவதும் உள்ள பக்தர்கள் கலந்து கொள்ள அழைப்பிதழ் வழங்கும் பணி நடந்து வருகிறது.

சென்னையில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இல்லத்தின் அருகில் வசிப்பவர்களின் இல்லங்களுக்கு நேரில் சென்று, ஸ்ரீராமர் கோவில் கும்பாபிஷேக அழைப்பிதழ் வழங்கினார்.

இதனிடையே, தமிழக ஆளுநர் மாளிகையில் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு, ஆர்.எஸ்.எஸ் சென்னை மாநகரத் தலைவர் ஸ்ரீ. சந்திர சேகர் மற்றும் விஸ்வ ஹிந்து பரிஷத் மாநிலத் தலைவர் ஸ்ரீ. ஆண்டாள் சொக்கலிங்கம் ஆகியோர் குடும்பத்துடன் சென்று அயோத்தி ஸ்ரீ ராமஜென்ம பூமி கும்பாபிஷேக அழைப்பிதழ், ஸ்ரீ ராமர் கோவில் படம் மற்றும் அட்சதையை கொடுத்தனர்.

அதனை ஆளுநர் ஆர்.என்.ரவி, பயபக்தியுடன் பெற்றுக் கொண்டார். நாடு முழுவதும், அயோத்தி ஸ்ரீராமர் கோவில் கும்பாபிஷேக அழைப்பிதழ் கொடுக்கும் பணி வேகம் அடைந்துள்ளது.

Tags: Prime Minister of Indiaramar temple inivitationModiL Muruganannamalaiayodhyatamilnadu governorayodhya ramar temple function
ShareTweetSendShare
Previous Post

ஸ்ரீநகரில் புதுசு: லால்சௌக்கில் புத்தாண்டு கொண்டாட்டம் கோலாகலம்!

Next Post

இந்தியாவில் புதிதாக 636 பேருக்கு கொரோனா பாதிப்பு – 3 பேர் பலி!

Related News

இந்தியாவை தொடர்ந்து ஆப்கனிஸ்தானும் அதிரடி : பாகிஸ்தானுக்குள் பாயும் நதியின் குறுக்கே அணை கட்ட முடிவு!

டெல்லியில் மாசு : மேக விதைப்பு பலன் தருமா? – செயற்கை மழை எப்படி சாத்தியம்!

AI தளங்களுக்கு கடிவாளம் போடும் இந்தியா – கடுமையான விதிகளை விதிக்க திட்டம்!

தீஸ்தா நதிநீர் பிரச்னையில் மாஸ்டர் பிளான் : சீனா-வங்கதேசம் கைகோர்ப்பு – இந்தியாவை பாதிக்குமா?

அடுத்த தலைமுறை போருக்கு தயாராகும் இந்திய ராணுவம் : களமிறக்கப்படும் பைரவ் கமாண்டோ படை ‘அஷ்னி’ ட்ரோன் பிரிவு!

புலனாய்வு அமைப்புகள் எச்சரிக்கை : மீண்டும் தலைதூக்க சதி செய்கிறதா PFI?

Load More

அண்மைச் செய்திகள்

ஆந்திராவை உலுக்கிய பேருந்து விபத்து : தூக்கத்திலேயே துடிதுடித்து பலியான சோகம்!

சமூக நீதி பற்றிப் பேசும் திமுக கூட்டணிக்குள்ளே சமூக நீதி இல்லை – நயினார் நாகேந்திரன்

இந்தியாவில் சிறு, குறு தொழில்கள் துறை வளர்ச்சி அடைந்து வருகிறது : பிரதமர் மோடி

கண்டுபிடிப்பது கஷ்டமாம் : பிரான்சில் கொள்ளை போன நெப்போலியன் கால நகைகள்!

ISIS அமைப்புடன் தொடர்புடைய 2 தீவிரவாதிகள் டெல்லியில் கைது!

ஐரோப்பாவில் இப்படி ஒரு நாடா?

திருவாரூர் : காதலனை காப்பாற்றுவதற்காக, தண்ணீரில் குதித்த காதலி – வெளியான சிசிடிவி காட்சி!

SIR க்கு தயாராக உள்ளோம் – தேர்தல் ஆணையம் தகவல்!

நாகை : டயர் வெடித்து தாறுமாறாக ஓடிய அரசு பேருந்து!

பி.எம்., ஸ்ரீ : கேரளாவை பார்த்தாவது மனம் மாறுங்கள், முதல்வர் ஸ்டாலின் – நயினார் நாகேந்திரன்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies