ஐசிசி-யின் சிறந்த டி20 வீரருக்கான பரிந்துரை பட்டியலில் இந்திய வீரர் சூர்யகுமார் யாதவ் இடம்பெற்றுள்ளார்.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஒவ்வொரு ஆண்டும் சிறந்த வீரர், சிறந்த வீராங்கனை, சிறந்த ஒரு நாள் அணி, டி20 அணி, டெஸ்ட் அணி உள்ளிட்ட பல்வேறு விருதுகளை வழங்கி வருகிறது.
அந்த வகையில் 2023ஆம் ஆண்டின் சிறந்த டி20 கிரிக்கெட் வீரர் விருதுக்கு 4 வீரர்களின் பெயர்களை ஐசிசி பரிந்துரைத்துள்ளது.
அதில் இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேனான சூர்யகுமார் யாதவ், ஜிம்பாப்வே அணியின் ஆல் ரவுண்டர் சிக்கந்தர் ராசா, நியூசிலாந்தை சேர்ந்த மார்க் சாப்மேன் மற்றும் உகாண்டா அணியை சேர்ந்த அல்பேஷ் ராம்ஜானி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
Suryakumar Yadav is in the running to claim Men's T20I Cricketer of the Year for a second straight year, though three men stand in his way 👀
More 👉 https://t.co/2oVnJD2hdo pic.twitter.com/r4ThLRSVRI
— ICC (@ICC) January 4, 2024
அதேபோல் 2023ஆம் ஆண்டின் சிறந்த டி20 கிரிக்கெட் வீராங்கனை விருதுக்கும் 4 பேரின் பெயர்களை ஐசிசி பரிந்துரைத்துள்ளது.
அதில் இலங்கை அணியின் கேப்டன் சாமரி அதபத்து, இங்கிலாந்து வீராங்கனை சோபி எக்லெஸ்டோன், வெஸ்ட் இண்டீஸ் அணியை சேர்ந்த ஹேலி மேத்யூஸ் மற்றும் ஆஸ்திரேலிய ஆல் ரவுண்டரான எல்லிஸ் பெர்ரி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
Three world-class all-rounders and the top-ranked women's T20I bowler 👀
A strong field for ICC Women's T20I Cricketer of the Year 👊
More 👉 https://t.co/vQd5sJfDXY pic.twitter.com/WRr1HyPL5a
— ICC (@ICC) January 4, 2024