அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழா வரும் 22ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த விழாவில் பங்கேற்க முக்கிய பிரமுகர்களுக்கு அழைப்பிதழ் வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், அசாமில் பார்பெட்டா நகரில், நடைபெற்ற கூட்டம் ஒன்றில் அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி அமைப்பின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான பத்ருதீன் அஜ்மல் பங்கேற்று பேசினார்.
அப்போது இஸ்லாமியர்கள் ஜனவரி 20-ந்தேதி முதல் 25-ந்தேதி வரை பயணங்களை தவிர்க்க வேண்டும் என்றும், எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் தெரிவித்தார். முஸ்லிம் சகோதரர்கள் இந்த காலகட்டத்தில் ரெயிலில் பயணம் செய்ய வேண்டாம் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
இதுதொடர்பாக மத்திய அமைச்சர் கிரிராஜ்சிங் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, ராமஜென்ம பூமி வழக்கின் மனுதாரரான இக்பால் அன்சாரிக்கு ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவுக்கான அழைப்பிதழ் அனுப்பப்பட்டுள்ளதாகவும்,அவர் விழாவில் பங்கேற்ற உள்ளதாகவும் கூறினார்.
இஸ்லாமியர்களை பாஜக வெறுப்பதில்லை என்றும் அவர் விளக்கம் அளித்தார்.பத்ருதீன் அஜ்மல், ஓவைசி போன்றவர்கள் சமூகத்தில் வெறுப்புணர்வை பரப்புவதாகவும், பா.ஜ.க., அனைத்து மதங்களையும் மதிப்பதாகவும் அமைச்சர் கிரிராஜ்சிங் கூறினார்.