ஏர் இந்தியா A350 விமானத்தின் புதிய புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. மேலும் இந்த விமானத்தின் உட்புற பணிகள் தீவிரமாக நடைபெற்றுவருகிறது.
ஐதராபாத்தில் நேற்று விங்ஸ் இந்தியா நிகழ்வு தொடங்கி விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஏர் இந்தியாவின் “ஏர்பஸ் A350” விமானம் அறிமுகம் செய்யப்பட்டது.
இந்நிலையில் ஏர் இந்தியா A350 விமானத்தின் புதிய புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. இந்த விமானத்தின் உட்புற பணிகள் தீவிரமாக நடைபெற்றுவருகிறது.
உள்ளே இருக்கைகள் பெரிய அளவில் மாற்றம் செய்யப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தற்போது மாற்றப்பட்ட Air India A350 விமானத்தின் புதிய புகைப்படங்கள் வெளியாகி உள்ளன.
பிஸ்னஸ் கிளாஸ் போன்ற அகலமான சீட்டுகள், பெரிய கால் இடைவெளி, குஷன், தலை வைக்க வசதியான அமைப்பு என்று சிறப்பான தோற்றத்தில் உருவாக்கி உள்ளன.
ஏ350-900 விமானத்தில் மொத்தம் 264 எக்கனாமி இருக்கைகள் உள்ளன.
இந்த 264 இருக்கைகளில் அமரும் பயணிகள் அனைவரும் எச்டி திரையைக் கொண்ட நவீன பானாசோனிக் இ.எக்ஸ் 3 இன்-ஃப்ளைட் பொழுதுப்போக்கு சிஸ்டத்தை பெறலாம்.
இந்த எக்கனாமி இருக்கைகள் இல்லாமல், தனியாக 24 பிரீமியம் தர எக்கனாமி இருக்கைகள் உள்ளன. இவற்றில் பயணிப்பவர்கள் மேற்கூறப்பட்ட பொழுதுப்போக்கு திரை உடன் அதிக லெக்ரூம் இடவசதி உள்பட சில கூடுதல் அம்சங்களை அனுபவிக்கலாம்.
அப்படியே, பிஸ்னஸ் வகுப்புக்கு சென்றால், அங்கு 28 இருக்கைகள் உள்ளன. ஏ350-900 விமானத்திலும் பிஸ்னஸ் கிளாஸில் படுக்கை வசதி உடன் இருக்கைகள் பயணிகளுக்கு வழங்கப்படுகின்றன.