குஜராத்தில் சோகம்: ஏரியில் படகு கவிழ்ந்து மாணவர்கள் உட்பட 16 பேர் பலி!
Sep 14, 2026, 05:11 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

குஜராத்தில் சோகம்: ஏரியில் படகு கவிழ்ந்து மாணவர்கள் உட்பட 16 பேர் பலி!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Jan 19, 2024, 11:50 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

குஜராத்தில் பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் சென்ற படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் மாணவர்கள் உட்பட 16 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

குஜராத் மாநிலம் வதோதரா அருகே ஹர்னி மோட்நாத் என்னும் பிரசித்தி பெற்ற ஏரி அமைந்திருக்கிறது. இந்த ஏரிக்கு பள்ளி மாணவர்களை அழைத்துக் கொண்டு ஆசிரியர்கள் சுற்றுலா சென்றனர். பின்னர், ஆசிரியர்கள், மாணவர்கள் என 27 பேர் ஒரு படகில் புறப்பட்டுச் சென்றனர்.

ஏரியின் மையப் பகுதிக்குச் சென்றபோது திடீரென அப்படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. தகவலறிந்து அப்பகுதி மக்கள் விரைந்து வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர். மேலும், தீயணைப்பு மீட்பு மற்றும் தேசிய பேரிடர் மீட்புப் படையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு, விரைந்து வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.

எனினும், இந்த விபத்தில் 14 மாணவர்கள் மற்றும் 2 ஆசிரியர்கள் என மொத்தம் 16 பேர் உயிரிழந்து விட்டனர். 10-க்கும் மேற்பட்டவர்கள் மீட்கப்பட்டனர். மாயமான மற்றொரு மாணவரை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இதனிடையே, குஜராத் முதல்வர் பூபேந்திர பாய் படேல் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்திருக்கிறார். இச்சம்பவம் குறித்து வதோதரா எம்.பி. ரஞ்சன்பென் கூறுகையில், “மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. மீட்கப்பட்ட மாணவர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விவகாரம் தொடர்பாக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கூறினார்.

Tags: boatGujratCapsized16 dead
Share
Tweet
SendShare
Previous Post

U -19 உலகக்கோப்பை கிரிக்கெட் இன்று தொடக்கம்!

Next Post

ஏர் இந்தியா “ஏர்பஸ் A350” விமானத்தின் தோற்றம்!

Related News

கோலாகலமாக நடைபெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் தேரோட்டம்; ஏராளமானோர் பங்கேற்பு

மதுராந்தகம் உள்ளிட்ட 3 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிப்பு; சீமான் அதிரடி

உணவிலும், காங்கிரஸ் கட்சி அரசியல் செய்து வருகிறது; கிரண் ரிஜிஜூ கண்டனம்

விநாயகர் சதுர்த்தி விழா – கோயம்பேடு சந்தையில் களைகட்டிய விற்பனை!

சர்வதேச விவகாரங்களில் செல்வாக்கு செலுத்தும் BRICS, G20 மற்றும் SAARC : வேறுபாடுகள் என்ன? – சிறப்பு தொகுப்பு!

மாற்றி அமைக்கப்படும் சர்வதேச ஒழுங்கு : பிரிக்ஸ் மாநாடு மூலம் இந்தியா மேற்கொண்ட ராஜதந்திர நகர்வு என்ன? – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

லண்டன் பயணம் குறித்து முதல்வர் விஜய் விளக்கம் அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

செயற்கை நுண்ணறிவை (AI) ஆயுதமாக பயன்படுத்தக்கூடாது – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு!

திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவம் – திருக்குடைகள் நன்கொடை!

ஹிந்து மத துறவியின் பாதங்களை தொட்டு ஆசி பெற்ற ஈரான் அதிபர் – வீடியோ வைரல்!

டாலருக்கு மாற்றாக பிரிக்ஸ் கரன்சி? : இந்தியா கொண்டு வரும் புதிய நாணயப் புரட்சி – சிறப்பு தொகுப்பு!

சுத்திகரிக்கப்படாமல் காவிரியில் கலக்கும் பெங்களூரு கழிவு நீர் – அமைச்சர் ராமலிங்க ரெட்டி

பிரிக்ஸ் மாநாட்டில் ராமேஸ்வரம் கோயிலின் பிரகாரத்தை திரையில் முன்னிறுத்திய பிரதமர் – நயினார் நாகேந்திரன் நன்றி!

தனியார் BOOKING APPS களின் dummy chart முறைகேடு – ஆம்னி பேருந்துகளின் புதிய கொள்ளை!

திருச்சியில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க வேண்டும் – மதிமுக எம்.பி துரை வைகோ வலியுறுத்தல்!

தமிழக காவல் துறையில் 29,108 புதிய பணியிடங்கள் – முதலமைச்சர் விஜய் ஒப்புதல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies