சபரிமலைக்கு இலவச பேருந்து சேவை: வி.ஹெச்.பி. மனுவுக்கு பதிலளிக்க அரசுக்கு நோட்டீஸ்!
May 19, 2025, 08:27 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சபரிமலைக்கு இலவச பேருந்து சேவை: வி.ஹெச்.பி. மனுவுக்கு பதிலளிக்க அரசுக்கு நோட்டீஸ்!

Web Desk by Web Desk
Jan 26, 2024, 07:34 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சபரிமலைக்குச் செல்லும் பக்தர்களுக்கு இலவசமாக பேருந்து சேவை வழங்க வேண்டும் என்று விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு பதிலளிக்குமாறு கேரள மாநில அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது..

கேரள மாநிலம் சபரிமலையில் அமைந்திருக்கும் ஐயப்பன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. ஆண்டுதோறும் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் சபரிமலைக்கு மாலை அணிந்து வருகை தருகிறார்கள்.

சபரிமலைக்கு வரும் பக்தர்களின் நலன் கருதி, நிலக்கல் முதல் பம்பை வரை சுமார் 22 கிலோ மீட்டர் தூரத்துக்கு இலவச பேருந்து சேவை வழங்க வேண்டும் என்று விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு சார்பில் 2023 ஏப்ரல் மாதம் 13-ம் தேதி அம்மாநில உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

ஆனால், இந்த மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதை எதிர்த்து வி.ஹெச்.பி. சார்பில் டெல்லி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சூர்யகாந்த், கே.வி.விஸ்வநாதன் ஆகியோர் தலைமையிலான அமர்வு விசாரித்தது.

அப்போது, விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு சார்பில் ஆஜரான வழக்கறிஞர்  வி.சிதம்பரேஷ், “கேரள மாநில அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் நிலக்கல் முதல் பம்பை வரை பேருந்துகள் இயக்கப்படுகின்றன. ஆனால், இப்பேருந்துகள்  பழுதடைந்திருப்பதோடு, அதிக அளவில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

ஆகவே, பக்தர்களின் நலன் கருதி மேற்கண்ட பகுதிக்கு இலவச பேருந்து சேவை வழங்க வேண்டும் என விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு அரசுக்கு கோரிக்கை வைத்திருக்கிறது” என்று கூறினார். இதையடுத்து, மேற்கண்ட வழக்கு தொடர்பாக பதிலளிக்குமாறு கேரள மாநில அரசுக்கு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது.

Tags: courtVHPSabarimalaiNoticeKerala
ShareTweetSendShare
Previous Post

75-வது குடியரசு தின விழா : அணிவகுப்பு படங்கள் !

Next Post

ஜம்மு காஷ்மீரில் குடியரசு தின விழா கோலாகலம்!

Related News

மக்கள் கொண்டாடும் ரியல் ஹீரோ ஏர் மார்ஷல் ஏ.கே.பார்தி!

ஆப்ரேஷன் சிந்தூர் : பாகிஸ்தானில் கதிர்வீச்சு கசிவு இல்லை : IAEA மறுப்பு!

தேச நலனுக்கான நடவடிக்கை : துருக்கி நிறுவனத்தை கை கழுவிய இந்தியா!

ராகுல் காந்தி குற்றச்சாட்டுக்கு வெளியுறவுத்துறை அமைச்சகம் மறுப்பு!

தெய்வசெயலின் குற்றச்செயல் – கதறும் பெண் : திமுக நிர்வாகிகளுக்கு இரையாக்க முயற்சி?

விண்ணில் ஏவப்பட்ட பி.எஸ்.எல்.வி. சி-61 ராக்கெட் தொழில்நுட்ப கோளாறு!

Load More

அண்மைச் செய்திகள்

ஹைதராபாத் அருகே அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து : பலியானோர் எண்ணிக்கை 17-ஆக உயர்வு!

வங்கதேசத்தில் இருந்து இறக்குமதி செய்ய மத்திய அரசு கட்டுப்பாடு!

இனி கரண்ட் பில் “NO” : PM சூர்யோதய திட்டம் சலுகையோ சலுகை!

கெலவரப்பள்ளி அணையிலிருந்து 4-வது நாளாக செல்லும் ரசாயன நுரைகள் : விவசாயிகள் அதிர்ச்சி!

சிந்து-விலும் தனி நாடு கோரி போராட்டம்-கலங்கும் பாகிஸ்தான்!

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் நிச்சயம் இருக்கும் : தமிழிசை சௌந்தரராஜன்

முதியவர்களை கொன்று நகைகளை கொள்ளையடித்த கும்பல் : 3 பேரை கைது செய்து விசாரணை!

புறநகரில் மாற்று வீடு : புறந்தள்ளப்படும் கரையோர மக்கள்!

திருக்கோயிலா? குப்பை மேடா? : முகம் சுளிக்கும் பக்தர்கள்!

பாகிஸ்தான் அரசுக்கு செக் வைத்த IMF : 11 நிபந்தனைகள் விதிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies