பாஜக மூத்த தலைவரும், முன்னாள் துணை பிரதமருமான எல்.கே.அத்வானிக்கு பாரத ரத்னா விருது வழங்கி மத்திய அரசு கௌரப்படுத்தியுள்ளது.
இதனையடுத்து அவருக்கு தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில், எல்.கே.அதிவானிக்கு பாரத ரத்னா விருது வழங்கியதற்காக பாரத பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக பாஜக சார்பில் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். எல்.கே.அத்வானி உண்மையான அரசாட்சியின் உருவகம் என தெரிவித்துள்ளார்.
அவரது நேர்மை மற்றும் இடைவிடாத அர்ப்பணிப்பு நமது தேச வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றியுள்ளது. அடிமட்டத்திலிருந்து துணைப் பிரதமர் வரை உயர்ந்து, சமூகத்தின் ஒவ்வொரு பிரிவினருக்கும் அவர் பணியாற்றியுள்ளார். அவரது பணி ஒவ்வொரு காரியகர்த்தாவையும் தொடர்ந்து ஊக்குவிக்கிறது என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.