ஈரான் ஆதரவு கிளர்ச்சி குழுக்களை குறிவைத்து அமெரிக்கா தாக்குதல்!
Sep 12, 2026, 11:32 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஈரான் ஆதரவு கிளர்ச்சி குழுக்களை குறிவைத்து அமெரிக்கா தாக்குதல்!

Murugesan M by Murugesan M
Feb 3, 2024, 02:37 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ஈராக், சிரியா நாடுகளில் செயல்பட்டு வரும் ஈரான் ஆதரவு கிளர்ச்சி குழுக்களை குறிவைத்து அமெரிக்கா தாக்குதல் நடத்தி உள்ளது.

பாலஸ்தீனத்தின் காஸா நகரை தங்களது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் ஹமாஸ் தீவிரவாதிகள், இஸ்ரேல் நாட்டின் மீது கடந்த அக்டோபர் 7-ஆம் தேதி ஆயிரக்கணக்கான ஏவுகணைகளை ஏவி தாக்குதல் நடத்தினர். இதையடுத்து, ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு எதிரான போரை இஸ்ரேல் தொடங்கியது. இந்த போரில் ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு சரியான பதிலடியை இஸ்ரேல் கொடுத்து வருகிறது.

இஸ்ரேல் – ஹமாஸ் இடையேயான போரில் ஏமனில் செயல்படும் ஹவுதி கிளர்ச்சியாளர்கள், ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு ஆதரவாக உள்ளனர். இதனால், செங்கடல் வழியாக செல்லும், இஸ்ரேல் மற்றும் இஸ்ரேலுக்கு ஆதரவான நாடுகளின் கப்பல்கள் மீது ஏவுகணைகள் வீசி தாக்குதல் நடத்தி வருகிறார்கள்.

இந்த தாக்குதல்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, அமெரிக்கா, இங்கிலாந்து கூட்டுப்படை ஒன்றிணைந்து ஏமனில் உள்ள ஹவுதி கிளர்ச்சியாளர்களைக் குறிவைத்து தாக்குதலை நடத்தி வருகிறது. இந்த ஒருங்கிணைந்த இராணுவ தாக்குதலில் போர்க்கப்பல்களும், போர் விமானங்களும் ஈடுபட்டு வருகின்றன. இந்த தாக்குதலால் மத்திய கிழக்கு பகுதிகளில் பதற்றமான நிலை காணப்படுகிறது.

இதனிடையே, கடந்த மாதம் ஜோர்டான் நாட்டில் உள்ள அமெரிக்க படைத்தளம் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில், 3 அமெரிக்க இராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். மேலும், 40 பேர் படுகாயமடைந்தனர். இந்த தாக்குதலை சிரியாவில் செயல்பட்டு வரும் ஈரான் ஆதரவு கிளர்ச்சியாளர்கள் நடத்தியதாக அமெரிக்கா குற்றஞ்சாட்டியது.

இதனையடுத்து, ஈராக், சிரியாவில் செயல்பட்டு வரும், ஈரான் ஆதரவு கிளர்ச்சி குழுக்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியுள்ளது. ஈரான் கிளர்ச்சியாளர்களின் 85  இலக்குகளைக் குறிவைத்து, 125 முறை தாக்குதல் நடத்தப்பட்டதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

ஈரான் ஆதரவு கிளர்ச்சி குழுக்களின் கட்டுப்பாட்டு மையங்கள், ராக்கெட்டுகள், ஏவுகணைகள், ஆளில்லா விமானங்கள், ஆயுத சேமிப்பு கிடங்குகள் ஆகியவற்றை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

Tags: iraqYemenSyria.Hamas militantsGaza CityUS military base
Share
Tweet
SendShare
Previous Post

எல்.கே.அத்வானிக்கு பாரத ரத்னா விருது : அண்ணாமலை வாழ்த்து!

Next Post

தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு வறண்ட வானிலை!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies